சைட் சாடிக் மீதான குற்றச்சாட்டு: மில்லியன் ரிங்கிட் நிதி மோசடியில் ‘மூளையாக’ செயல்பட்டதாகக் குற்றச்சாட்டு

top-news

புத்ராஜெயா, டிச. 11-

முன்னாள் இளைஞர், விளையாட்டு அமைச்சரும், மூவார் நாடாளுமன்ற உறுப்பினருமான சைட் சாடிக் , பெர்சாத்து கட்சியின் இளைஞர் பிரிவான அர்மடாவின் 1 மில்லியன் ரிங்கிட் நிதியை தவறாகப் பயன்படுத்திய வழக்கில் முழு பொறுப்பும் அவரையே சாரும் என்று இன்று கூட்டரசு நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதிட்டது.

துணை பொது குற்றவியல் வழக்கறிஞர் டத்தோ வான் ஷஹாருடின் வான் லாடின் வாதிடுகையில், சைட் சாடிக் இந்த குற்றத்தில் “மூளையாக” செயல்பட்டதாகவும், அர்மடாவின் முன்னாள் உதவி பொருளாளர் ரபிக் ஹாகிம் ரசாலிக்கு தவறான நோக்கத்துடன் பணத்தை வெளியிட உத்தரவிட்டதாகவும் தெரிவித்தார்.

ரபிக் ஹாகிம் சாட்சியம் அளித்தபோது, “சைட் சாடிக் உத்தரவு இல்லாவிட்டால் நான் ஒரு சென் கூட வெளியிட மாட்டேன்” என்று தெளிவாகக் கூறியதாக அரசு தரப்பு சுட்டிக்காட்டியது. மேலும், அரசு தரப்பு சாட்சிகள் 10, 11,12 ஆகியோரின் வாக்குமூலங்களும் ரபிக்கின் கூற்றை உறுதிப்படுத்துவதாகவும், அனைத்து நடவடிக்கைகளும் சைட் சாடிக்கின் உத்தரவின் பேரிலேயே நடந்ததாகவும் வலியுறுத்தப்பட்டது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *