கனரக வாகனங்களுக்கு எதிரான நடவடிக்கை ஆண்டு முழுவதும் தொடரும் – போக்குவரத்து அமைச்சர்
- Tamil Malar (Reporter)
- 28 Jan, 2026
புத்ராஜெயா, ஜன. 28-
அதிக சுமை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களுக்கு எதிரான சட்ட அமலாக்க நடவடிக்கைகள், (Op Perang Lebih Muatan) உள்ளிட்ட செயல்பாடுகள் , ஆண்டு முழுவதும் தொடரும் என போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் உறுதிப்படுத்தினார்.
தொழில் துறையில் செயல்படும் அனைத்து தரப்பினரும் சட்ட விதிகளைக் கடைபிடிக்க வேண்டும் என்றும், எந்தவொரு மீறலிலும் ஈடுபடக் கூடாது என்றும் அவர் எச்சரித்தார். சட்டத்தை மீறுவோருக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
2026 ஆம் ஆண்டு இப்போதுதான் தொடங்கியுள்ள போதிலும், கடந்த டிசம்பரில் கனரக வாகனங்களுக்கு எதிரான பெரிய அளவிலான நடவடிக்கைகள் முடிவடைந்துள்ளன. இருப்பினும், போக்குவரத்துத் துறையுடன் தொடர்புடைய சட்ட அமலாக்கம் பருவகால நடவடிக்கையாக அல்ல என்றும், அது தொடர்ச்சியாக நடைபெறும் செயல்முறை என்றும் அந்தோனி லோக் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



