முகநூல் காதலியிடம் RM766,788 இழந்த ஆடவர்!

top-news

மார்ச் 19,

முகநூலில் அறிமுகமானப் பெண்ணிடம் தனது சேமிப்புப் பணம் மட்டுமல்லாது தனது தாயாரின் சேமிப்புப் பணத்தையும் பறிகொடுத்த 34 வயது நிறுவன மேலாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். முகநூலில் பழக்கமானப் பெண் காதலியாகவும் நம்பிக்கையுடனும் பழகியதால் அவர் அறிமுகப்படுத்திய முதலீட்டில் பணத்தைச் செலுத்திய 34 வயது ஆடவர் தாம் ஏமாற்றப்பட்டதாகவும் அந்த முகநூல் கணக்கும் போலியானக் கணக்கு என பகாங் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Seri Yahaya Othman தெரிவித்தார்.

முதல் நாள் RM5,000 முதலீடு செய்ததும் மறுநாளே RM5,700 லாபம் பெற்றதால் நம்பிக்கையுடன் பிப்ரவரி 12 முதல் மார்ச் 16 வரையில் 5 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு RM766,788 பணத்தை மொத்தமாகப் பரிவர்த்தனை செய்ததாகவும் அதன் பின்னர் சம்மந்தப்பட்ட முகநூல் கணக்கிலிருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை என்றும் முதலீடு செய்த வலைத்தலமும் செயல்பாட்டில் இல்லை என்றும் பாதிக்கப்பட்ட 34 வயது ஆடவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Seorang pengurus syarikat berusia 34 tahun kehilangan RM766,788 selepas diperdaya oleh seorang wanita yang dikenalinya di Facebook. Mangsa melabur secara berperingkat dalam skim pelaburan palsu sebelum menyedari dirinya ditipu dan membuat laporan polis.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *