கெடாவில் மேலும் ஒருவரைச் சுட்டுக்கொன்ற காவல்துறை!

top-news

ஜூலை 6,


பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஆடவர் ஒருவரைக் காவல்துறை சுட்டுக் கொன்றது. நேற்று சனிக்கிழமை இரவு 7.50 மணிக்குப் புக்கிட் அமான் சிறப்புப் படையினர் சந்தேகநபரைக் கைது செய்ய முயற்சித்த போது இந்த துப்பாக்கிச் சூடு நிகழ்ந்ததாக BUKIT AMAN குற்றப்புலனாய்வுத் துறையின் (JSJ) இயக்குநர் Datuk Fadil Marsus தெரிவித்தார். இரவு 7.30 மணியளவில் சந்தேக நபர் கெடா சுங்கை பெட்டாணியிலிருந்து Toyota Camry வாகனத்தில் வெளியேறியதைக் காவல்துறையினர் கண்டறிந்ததும் jalan Sidam Kiri சாலையில் காவல் அதிகாரிகள் வாகனத்தை முற்றுகையிட்டு சோதனையிட முயற்சித்த போது சந்தேகநபர் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதால் தற்காப்புக்காகக் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக BUKIT AMAN குற்றப்புலனாய்வுத் துறையின் (JSJ) இயக்குநர் Datuk Fadil Marsus தெரிவித்தார். 


காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் 34 வயதான உள்ளூர் ஆடவர் என்றும் அவர் மீது 30க்கும் மேற்பட்ட குற்றப்பதிவுகள் இருப்பதாகவும் BUKIT AMAN குற்றப்புலனாய்வுத் துறையின் (JSJ) இயக்குநர் Datuk Fadil Marsus தெரிவித்தார். உயிரிழந்தவரின் வாகனத்திலிருந்து துப்பாக்கிகளையும் வெடிமருந்துகளையும் கொள்ளையின் போது பயன்படுத்தப்படும் ஆயுதங்களையும் காவல்துறை பறிமுதல் செய்துள்ளது. உயிரிழந்த 34 வயது ஆடவர் கடந்த டிசம்பர் மலாக்காவில், கடந்த மார்ச் நீலாயில், தற்போது ஜூன மாதத்தில் ஈப்போவிலும் நடந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் இதன் மூலம் சுமார் RM6 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் BUKIT AMAN குற்றப்புலனாய்வுத் துறையின் (JSJ) இயக்குநர் Datuk Fadil Marsus விளக்கமளித்தார்.


Seorang lelaki tempatan berusia 34 tahun yang disyaki terlibat lebih 30 kes samun ditembak mati oleh polis di Kedah selepas suspek melepaskan tembakan ke arah anggota. Polis turut merampas senjata api, bahan letupan dan barang samun bernilai RM6 juta.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *