பாலஸ்தீன நாடு உருவாக்கம் இன்றி இஸ்ரேலுடன் உறவு இல்லை!

top-news

செய்தி- வெற்றி மைந்தன்

வாஷிங்டன், நவ. 19-

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், இஸ்ரேலுடன் ஏதேனும் உறவுகளை ஏற்படுத்துவதற்கு முன், பாலஸ்தீன நாட்டை உருவாக்கும் தெளிவான பாதை இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் வெள்ளை மாளிகையின் அலுவலகத்தில் நடந்த சந்திப்பில் இந்த அறிக்கை வெளியானது.

ஆபிரகாம் ஒப்பந்தத்தின் மூலம் இஸ்ரேலுடன் உறவுகளை ஏற்படுத்த விரும்புகிறோம் என்று இளவரசர் கூறினார். ஆனால், இரு நாடுகள் தீர்வின் கீழ் பாலஸ்தீனர்களுக்கு நாடு உருவாக்கப்படுவதன் தெளிவான பாதை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

டிரம்ப், தனது முதல் தவணை தொட்டே ஆபிரகாம் ஒப்பந்தத்தை விரிவுபடுத்த விருப்பம் தெரிவித்தார். ஆனால், இஸ்ரேல்-பாலஸ்தீன் சமாதானத்திற்கான பாதைகள் பற்றி விவாதத்தின் போது, சவுதி தலைவரிடமிருந்து நேர்மறையான பதிலைப் பெற்றதாகவும் கூறினார். இருப்பினும், பாலஸ்தீன நாட்டின் அவசியத்தை இளவரசர் மீண்டும் வலியுறுத்தினார்.

இந்த சந்திப்பு, 2018-இல் ஜமால் கஷோக்ஜி கொலைக்குப் பின் இளவரசரின் முதல் வெள்ளை மாளிகை பயணமாகும். இஸ்ரேல்-சவுதி சமாதானம் மத்திய கிழக்கை மாற்றும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், காசாவில் நிலைமை மேம்படும் வரை இது தாமதமாகலாம். சவுதி, காசா மீட்சிக்கு நிதி உதவி அளிக்கும் என்றும் இளவரசர் உறுதியளித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *