பேருந்து பயணிகள் கட்டாயம் SEAT BELT அணிந்திருக்க வேண்டும்! 1 ஜூலை முதல் சோதனை தொடங்கும்!

top-news

ஜூன் 29,


பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளும் இனி கட்டாயம் SEAT BELT அணிந்திருக்க வேண்டும் என தேசிய சாலை போக்குவரத்துத் துறை (JPJ) இயக்குநர் Datuk Aedy Fadly Ramli இன்று தெரிவித்தார். பேருந்து ஓட்டுநர்கள் மட்டுமின்றி பேருந்தில் பயணிக்கும் அனைத்து வகையான பயணிகளுக்கும் இது காட்டாயமாக்கப்பட்டிருப்பதாகவும் Datuk Aedy Fadly Ramli தெரிவித்தார். ஜூலை 1 முதல் இந்த அறிவிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அனைத்து வகை பேருந்துகளிலும் சோதனையை மேற்கொள்வதாகவும் Datuk Aedy Fadly Ramli தெரிவித்தார். 

பேருந்தில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பிற்காக இது கட்டாயமாக்கப்பட்டிருப்பதால் பயணிகள் SEAT BELT அணிந்திருப்பதைப் பேருந்து நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் SEAT BELT இல்லாத பேருந்துகளில் விரைந்து பேருந்தின் இருக்கைகளை மாற்றியமைக்கும்படியும் Datuk Aedy Fadly Ramli வலியுறுத்தினார். JPJ சோதனையில் பயணிகள் SEAT BELT அணியாதது கண்டறியப்பட்டால் பயணிகளுக்கும் சம்மந்தப்பட்ட பேருந்து நிறுவனத்திற்கும் தலா RM300 முதல் அபராதம் விதிக்கப்படும் என்றும், இந்த அபராதத் தொகை சூழ்நிலைக்கு ஏற்ப அதிகரிக்கும் என்றும் தேசிய சாலை போக்குவரத்துத் துறை (JPJ) இயக்குநர் Datuk Aedy Fadly Ramli எச்சரித்தார்.

Bermula 1 Julai, semua penumpang bas diwajibkan memakai tali pinggang keledar. JPJ akan jalankan pemeriksaan di semua bas. Syarikat bas wajib sediakan kerusi dengan tali pinggang. Penumpang dan pengusaha boleh didenda minimum RM300 jika ingkar.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *