பேருந்தை மறித்த சைக்கிளோட்டிகள்! காவல்துறை விசாரணை!

top-news

ஜூலை 8,


சாலையில் சைக்கிளோட்ட நடவடிக்கையில் ஈடுபட்ட கும்பல் பேருந்தை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபடும்படியான காணொலி குறித்து காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருவதாக Kuala Selangor மாவட்டக் காவல் ஆணையர் Azaharudin Tajudin தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து இன்று காலை காவல்துறைக்குப் புகார் அளிக்கப்பட்டதாகவும் சம்மந்தப்பட்ட சைக்கிளோட்டிகள் மீது வழக்கு பதிவு செய்திருப்பதாகவும் விரைவில் அவர்கள் விசாரணைக்காக அழைக்கப்படுவார்கள் என Kuala Selangor மாவட்டக் காவல் ஆணையர் Azaharudin Tajudin தெரிவித்தார்.

இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை 9.35 மணியளவில் கோலா சிலாங்கூரிலிருந்து சுங்கை பூலோ செல்லும் சாலையின் 23 ஆவது கிலோமிட்டரில் நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. பொதுப்போக்குவரத்தைப் பாதிக்கும் வகையில் தனிநபர்கள் செயல்படுவதைக் காவல்துறை கண்டிப்பதாகவும் சாலைகளின் விதிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்புடன் பயணிக்கும்படியும் Kuala Selangor மாவட்டக் காவல் ஆணையர் Azaharudin Tajudin வலியுறுத்தினார். இது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சம்மந்தப்பட்ட பேருந்து ஓட்டுநரிடமும் சைக்கிளோட்டிகளிடமும் விசாரணை மேற்கொள்வதாக Kuala Selangor மாவட்டக் காவல் ஆணையர் Azaharudin Tajudin தெரிவித்தார்.


Polis Kuala Selangor sedang menyiasat insiden sekumpulan penunggang basikal yang didakwa menghalang bas di jalan raya hingga berlaku pertengkaran. Rakaman kejadian itu tular. Polis memberi amaran tindakan tegas akan diambil terhadap individu yang ganggu keselamatan awam

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *