தலைநகரின் முக்கிய சாலைகள் மூடப்படும்!

- Sangeetha K Loganathan
- 12 Mar, 2025
மார்ச் 12,
இன்று தலைநகரின் முக்கிய சாலைகள் மாலை 5 முதல் மூடப்படுவதாகவும், மூடப்படும் முக்கிய சாலைகளின் பட்டியலைக் கோலாலம்பூர் போக்குவரத்து ஆணையத்தின் இயக்குநர் Zamzuri Isa வெளியிட்டுள்ளார்.
நாளை இந்தியர்களின் சமயவிழாவான மாசி திருவிழாவிற்கானத் தேர் ஊர்வலம் மாலை 5 மணிக்கு Tun.H.S.Lee சாலை வழியாகப் பத்துமலையிலிருந்து தலைநகர் Sri Maha Mariamman ஆலயத்தை நோக்கி பயணிக்கவிருப்பதால் சாலைகள் மூடப்படுவதாக அவர் தெரிவித்தார்.
மாசி திருவிழா தேர் ஊர்வலம் பத்துமலையிலிருந்து Jalan Sri Batu Caves - Jalan 46/10 - Jalan Sentul Pasar - Jalan Sentul - Jalan Tanah Lapang - Jalan Enam, Jalan Sentul வழியாக Jalan Ipoh - Jalan Tuanku Abdul Rahman - Jalan Dang Wangi - Jalan Ampang - Jalan Leboh Ampang - Jalan Tun Perak - Jalan Pudu - Jalan Tan Cheng Lock - Jalan Sultan - Jalan Tun H.S. Lee யில் உள்ள மாரியம்மன் ஆலயத்தை வந்தடையும் என்பதால் தேர் ஊர்வலம் முடிவடைந்ததன் பின்னர் சாலைகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க பிரதானச் சாலைகளைத் தவிர்க்கும்படி கோலாலம்பூர் போக்குவரத்து ஆணையத்தின் இயக்குநர் Zamzuri Isa வலியுறுத்தினார்.
Beberapa jalan utama di Kuala Lumpur akan ditutup mulai 5 petang hari ini untuk perarakan Thaipusam Maasi Thiruvizha. Perarakan bermula dari Batu Caves ke Kuil Sri Maha Mariamman melalui beberapa jalan utama. Pengguna jalan raya dinasihatkan mengelak laluan berkenaan bagi mengurangkan kesesakan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *