கோலா லாங்காட் பகுதியில் பன்றி பண்ணைகள் மூடல் – விரைவில் அமல்

top-news

ஷா ஆலாம், ஜன. 29-

கோலா லாங்காட்,  அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கி வரும் பன்றி வளர்ப்பு பண்ணைகள், இந்த ஆண்டுக்குள் விரைவாக மூடப்படும் என சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

அதே நேரத்தில், சிலாங்கூர் மாநிலத்தில் பன்றி இறைச்சி வழங்கல் தேவைகள் குறித்து அரசு விரிவான ஆய்வை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

ஆய்வு முடிவடைந்த பின்னர் எடுக்கப்படும் எந்த முடிவும், சந்தையில் உள்ள விற்பனை, விலை நிலவரத்தை கவனத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும் என்றும், நுகர்வோருக்கு கூடுதல் சுமை ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் திட்டமிடப்படும் என்றும் அமிருடின் ஷாரி வலியுறுத்தினார்.

“முன்னதாக, மாட்சிமை பொருந்திய சிலாங்கூர் சுல்தான்  பன்றி இறைச்சி தேவையின் அளவு குறித்து ஆய்வு செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி தற்போது அந்த ஆய்வு நடைபெற்று வருகிறது. ஆய்வு நிறைவடைந்ததும், பண்ணைகள் மூடப்படுவதற்கான நடவடிக்கைகள் இந்த ஆண்டிலேயே விரைவில் செயல்படுத்தப்படும்,” என அவர் தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *