போலியான வரலாற்றை அடுத்த தலைமுறையிடம் திணிக்காதீர்! பேராக் சுல்தான் Nazrin!
- Thinagaren Sanggaren
- 05 Nov, 2025
நவம்பர் 5,
மலேசியாவின் வரலாறு பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் நிருவப்பட்டிருப்பதால் போலியான வரலாற்றைத் திணிக்க வேண்டாம் என இன்று பேராக்கில் நடைபெற்ற தேசிய ஒருமைபாடு நிகழ்ச்சியில் பங்கேற்ற பேராக் சுல்தான் Nazrin Shah வலியுறுத்தினார். நம் அடுத்த தலைமுறைக்கு நியாயமான வரலாற்றைக் கற்பிக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. அதை விடுத்து தவறான, போலியான ஆவணங்களை உள்ளடக்கிய வரலாறுகளை நேர்மையற்ற கல்வியாளர்கள் பரப்ப வேண்டாம் என பேராக் சுல்தான் Nazrin Shah கேட்டுக்கொண்டார்.
இப்போது மலேசியாவாக இருக்கும் இந்த தேசத்தின் வரலாறு 1511 ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது. அப்போது போர்த்துகீசியர்களால் வீழ்த்தப்பட்ட மலேசியாவின் ஆட்சியாளர்கள் மீண்டும் இந்த தேசத்தைக் கட்டி எழுப்ப 400 ஆண்டுகளாகியது. இவ்வளவு கால தாமதமானதற்கு எதிரிகள் மட்டும் காரணம் அல்ல, மாறாக துரோகிகளும் முக்கிய காரணம். அப்படியான துரோகிகளின் கருத்துகளை வரலாறாக நாம் ஏற்றுக் கொண்டால் நம் அடுத்த தலைமுறை தவறாக வழிநடத்தப்படும் என பேராக் சுல்தான் Nazrin Shah எச்சரித்தார்.
உள்ளுக்குள்ளே இருக்கும் துரோகிகளால் நாடு லஞ்சத்திலும் ஊழலிலும் நிறைந்து வருவதை எதிர்க்கும் ஒரு தலைமுறையை நாம் உருவாக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு உண்மையான வரலாற்றைக் கற்பிக்க வேண்டும் என பேராக் சுல்தான் Nazrin Shah வலியுறுத்தினார். இன்று தொடங்கிய தேசிய ஒருமைபாடு நிகழ்ச்சியில் பேராக் மெந்திரி பெசார் Datuk Seri Saarani Mohamad, அரசாங்கத்தின் தலைமை செயலாளர் Tan Sri Shamsul Azri Abu Bakar ஆகியோர் பங்கேற்றனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



