பேராக் சுல்தான் மீது தாக்குதல்! ஈப்போ மெர்டேக்கா கொண்டாட்டத்தில் பரபரப்பு!
- Thinagaren Sanggaren
- 31 Aug, 2025
ஆகஸ்ட் 31,
இன்று காலை பேராக் மாநில அளவிலான சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது பேராக் சுல்தான் Nazrin Shah மீது தாக்குதல் மேற்கொண்ட பெண் கைது செய்யப்பட்டார். இன்று காலை 8.20 மணிக்கு ஈப்போ பொதுமண்டபத்தில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகவு பேராக் சுல்தானின் பாதுகாவலர்களால் சம்மந்தப்பட்ட பெண் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் பேராக் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Noor Hisam Nordin தெரிவித்தார். கைது செய்யப்பட்ட பெண் 41 வயது உள்ளூர் பெண் என்றும் போதைப்பொருள் தொடர்பான முந்தைய வழக்குகளுடன் அவர் தொடர்புடையவர் என Datuk Noor Hisam Nordin தெரிவித்தார்.
பேராக் மாநில மெர்டேக்கா கொண்டாட்டத்தில்
தேசிய கீதம் இசைக்கப்பட்டுக்கொண்டிருந்த போது மேடையின் பின் வரிசையிலிருந்த அந்த பெண்
தனது வரிசையிலிருந்து விலகி முன்னே வர முயற்சித்த போது மேடையிலிருந்த பாதுகாவலர்கள்
அவரைத் தடுக்க முயற்சித்தனர். பாதுகாவலரையும் மீறி சம்மந்தப்பட்ட 41 வயது பெண் பேராக்
சுல்தான் மீது பாய்ந்து தாக்குதலை மேற்கொள்ள முயற்சித்தார், உடனடியாகச்
சுற்றியிருந்த பாதுகாவலர்களால் அவர் மடக்கி பிடிக்கப்படும்படியானக் காணொலி சமூகவலைத்தலங்களில்
பரவியது. இது தொடர்பாகச் சம்மந்தப்பட்ட பெண்ணிடம் விசாரணையை மேற்கொண்டு வருவதாக பேராக்
மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Noor Hisam Nordin தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



