அரிசி தர நிர்ணயம் மற்றும் விலை கட்டுப்பாட்டுக்கு புதிய விதிமுறை

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப். 24-

நாட்டில் அரிசி தரம் மற்றும் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில், அரிசி மற்றும் நெல் கட்டுப்பாட்டு சட்டம் 522 (Akta Kawalan Padi dan Beras) கீழ் புதிய விதிமுறை உருவாக்கப்பட உள்ளது. இதனை வேளாண்மை மற்றும் உணவுக் காப்புறுதி அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமது சாபு அறிவித்தார்.

தேவான் ரக்யாட் சிறப்பு அமர்வில், ஆராவைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ ஷாஹிடான் காசிம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், இந்த புதிய விதிமுறை சட்ட திருத்தமாக அடுத்த பாராளுமன்ற கூட்டத் தொடரில் முன்வைக்கப்படும் என்று தெரிவித்தார். அதற்கு முன் பல தரப்பினருடன் கலந்துரையாடல் (libat urus) நடைபெறும். மேலும், இது பாராளுமன்ற சிறப்பு தெரிவுக்குழுவிற்கும் பரிந்துரைக்கப்படும்.

புதிய விதிமுறையின் கீழ், வெள்ளை அரிசிக்கு தெளிவான தர நிர்ணயம் (gred specification) மற்றும் அதற்கான விலை நிர்ணயம் செய்யப்படும். இதன் மூலம் சந்தையில் அரிசியின் தரம் உறுதி செய்யப்படுவதுடன், அதிக விலை வசூலிப்பது போன்ற பிரச்சினைகள் தவிர்க்கப்படும் என்று அமைச்சர் விளக்கமளித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *