DATARAN MERDEKA கைகலப்பில் ஈடுபட்ட 5 இளைஞர்கள் கைது!

- Sangeetha K Loganathan
- 03 Jun, 2025
ஜூன் 3,
தலைநகர் டத்தாரான் மெர்டேக்கா சாலையில் இரு கும்பலுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பில் சம்மந்தப்பட்டிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் 5 உள்ளூர் இளைஞர்களைக் காவல்துறை கைது செய்திருப்பதாக DANG WANIG மாவட்டக் காவல் ஆணையர் Sulizmie Affendy Sulaiman தெரிவித்தார். கைது செய்யப்பட்டிருக்கும் 5 இளைஞர்களும் 17 முதல் 23 வயதுக்குற்பட்ட உள்ளூர் இளைஞர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பானக் காணொலி சமூகவலைத்தளங்களில் பரவியதை அடுத்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக Sulizmie Affendy Sulaiman தெரிவித்தார்.
சமூகவலைத்தளத்தில் பரவிய 23 வினாடிகள் காணொலியின் அடிப்படையில் இந்த ஐவர் மட்டுமே அடையாளம் காணப்பட்டதாகவும் கைது செய்யப்பட்டிருக்கும் 5 இளைஞர்களும் மேலதிக விசாரணைக்காக ஜூன் 5 வரையில் தடுப்புக் காவலில் வைத்திருப்பதாகவும் கைகலப்பின் போது சம்பவத்தை நேரில் கண்டவர்கள் முன் வந்து விசாரணைக்கு உதவும்படி DANG WANIG மாவட்டக் காவல் ஆணையர் Sulizmie Affendy Sulaiman வலியுறுத்தினார்.
Lima remaja tempatan berusia 17 hingga 23 tahun ditahan kerana disyaki terbabit dalam pergaduhan antara dua kumpulan di Dataran Merdeka. Polis sedang menyiasat kejadian berdasarkan video 23 saat yang tular di media sosial.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *