கம்போங் அருகே புலி – கண்காணிப்பு கேமரா அமைத்தது வனத்துறை
- Surendran Sumdraraj
- 10 Mar, 2026
குளுவாங், மார்ச் 10-
ஜொகூர் மாநிலத்தின் கம்போங் ரஹ்மத் பகுதியில் புலி ஒன்று சுற்றித்திரிகிறது என்ற தகவலைத் தொடர்ந்து, அதனை கண்காணிக்க வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்கா துறை (PERHILITAN) கண்ணிகளை அமைத்துள்ளது.
ஜொகூர் PERHILITAN இயக்குநர் அமினுடின் ஜாமின் கூறுகையில், அப்பகுதி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அத்துடன், புலி அப்பகுதியில் இருந்து வெளியேறும்படி தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
நேற்று, ஒரு தோட்ட உரிமையாளர் தனது வாகனத்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது, புலி ஒன்று சாலையைக் கடந்து சென்ற காட்சியைத் தனது கைப்பேசியில் பதிவு செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம், அந்த தோட்ட உரிமையாளர் தனது தொழிலாளியை அழைத்து வருவதற்காக நான்கு சக்கர வாகனத்தில் (4x4) பயணம் செய்துகொண்டிருந்தபோது நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து, அப்பகுதி மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, PERHILITAN அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமையை ஆய்வு செய்ததுடன், மக்களுக்கு எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், புலி கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும், மக்கள் தனியாக காட்டுப்பகுதிகளில் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



