பெரிக்காத்தான் வங்கியில் RM 2,700 ரிங்கிட் மட்டுமே உள்ளது! நிதி கொடுங்கள்! சனூசி புலம்பல்!
- THINAGAREN SANGGAREN
- 25 Mar, 2026
மார்ச் 25,
மலேசிய அரசியலில் எதிர்கட்சியாக இருக்கும் பெரிக்காத்தான் கூட்டணியின் வங்கியில் RM 2,700 ரிங்கிட் மட்டுமே உள்ளது என பெரிக்காத்தான் பொருளாளர் Dato’ Seri Sanusi Nor தெரிவித்துள்ளார். என் கையில் அதை விடவும் அதிகமான பணம் இருப்பதாகவும் ஆனால் பெரிக்காத்தானிடம் நிதி இல்லை என்றும் கெடா மாநில மெந்திரி பெசாருமான Dato’ Seri Sanusi Nor தெரிவித்தார். பெரிக்காத்தானில் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தாலும் அவர்களுடைய செலவுகளை அவர்களே கவனித்துக் கொள்கிறார்கள் என Dato’ Seri Sanusi Nor தெரிவித்தார்.
இந்த RM 2,700 ரிங்கிடை வைத்துக் கொண்டு நாங்கள் என்ன செய்ய முடியும்? இதை நிர்வாகிக்க நான் பொருளாளர் என அவர் புலம்பியுள்ளார். ஆனால், உண்மையிலேயே ஊழல் அற்ற கட்சியாகவும் பணத்தை நம்பி அரசியல் செய்யாத ஒரு கட்சியாகவும் பெரிக்காத்தான் உள்ளது என பெரிக்காத்தான் பொருளாளர் Dato’ Seri Sanusi Nor தெரிவித்தார். நாங்கள் இந்த நாட்டில் ஓர் ஆரோக்கியமான அரசியலை முன்னெடுக்கிறோம். எங்கள் மீது ஊழல், லஞ்சம், நிதி மோசடி என குற்றச்சாட்டுகளைச் சுமத்தினாலும் அரசியல் நோக்கத்திற்காகவும் எங்களைப் பழிவாங்குவதற்காகவும் ஆட்சியில் இருப்பவர்கள் எடுக்கும் நடவடிக்கை அது என பெரிக்காத்தான் பொருளாளர் Dato’ Seri Sanusi Nor தெரிவித்தார்.
சில கட்சிகள் அரசாங்கத்தின் குத்தகைகளைப் பெற்றுக் கொண்டு அதன் மூலம் சம்பாதிக்கிறார்கள். ஆனால் பெரிக்காத்தான் அதனை விரும்பவில்லை. மக்கள் நிதியளிப்பார்கள் எனும் நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அதன் மூலம் அடுத்த தேர்தலின் செலவீனங்களைப் பெரிக்காத்தான் எதிர்கொள்ளும் என்றும் Dato’ Seri Sanusi Nor தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



