நெகிரி செம்பிலான் பெரிக்காத்தான் தலைவர் ராஜினாமா!
- Thinagaren Sanggaren
- 30 Dec, 2025
டிசம்பர் 30,
Tan Sri Muhyiddin Yassin பெரிக்காத்தான் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தவுடன் பேராக், சிலாங்கூர், ஜொகூர் மாநிலப் பெரிக்காத்தான் தலைவர்களும் தங்கள் மாநிலப் பெரிக்காத்தான் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்ததை அடுத்து தற்போது நெகிரி செம்பிலான் மாநிலப் பெரிக்காத்தான் தலைவரான HANIFAH ABU BAKER தனது மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஜனவரி 1 முதல் பெரிக்காத்தான் தலைவர் Tan Sri Muhyiddin Yassin பதவி விலகுவதைத் தொடர்ந்து தாமும் தனது நெகிரி செம்பிலான் மாநிலத்தின் கட்சிப் பொறுப்புகளை ராஜினாமா செய்வதாக Labu சட்டமன்ற உறுப்பினருமான HANIFAH ABU BAKER தெரிவித்துள்ளார். நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான HANIFAH ABU BAKER மாநிலப் பெரிக்காத்தான் பதவிகள் கட்சியின் தலைவரால் நியமிக்கப்படும் என்பதால் இந்த முடிவைத் தாம் எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



