பெரிக்காத்தான் ஆளும் மாநிலங்களில் இந்தியர்களுக்கான திட்டங்கள் எங்கே? – பி.கே.ஆர் MP கேள்வி?

top-news
FREE WEBSITE AD

ஆகஸ்ட் 19,

இப்போது மடானி அரசாங்கத்தின் மூலமாக இந்தியர்களுக்கு RM972 மில்லியன் மதிப்பிலான திட்டங்களைப் பிரதமர் அன்வார் பட்டியலிட்டுள்ளார். இதில் 1% மதிப்பிலானத் திட்டங்களை இந்தியர்களுக்காகப் பெரிக்காத்தான் ஆளும் கட்சிகள் வழங்கியிருக்கிறதா? எனும் கேள்வியை Taufiq Johari பெரிக்காத்தானில் இருக்கும் இந்தியர்களை நோக்கி கேள்வியை முன்வைத்துள்ளார். 

இன்று பிரதமர் அன்வார் மலேசிய இந்தியர்களுக்காக அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து புள்ளிவிவரங்களுடன் நாடாளுமன்றத்தில் அளித்திருக்கும் விளக்கம் மடானி அரசு இந்தியர்களைப் புறக்கணிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியிருப்பதாகச் சுங்கை பெட்டாணி நாடாளுமன்ற உறுப்பினர் Taufiq Johari தெரிவித்தார். சுங்கை பெட்டாணி நாடாளுமன்றத்தில் சுமார் 13% இந்தியர்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் அரசாங்கத்தின் திட்டங்களைக் கொண்டு சேர்க்கும் பொறுப்பு எனக்கு இருப்பதை நான் உணர்கிறேன் என Taufiq Johari தெரிவித்தார். 

இந்தியர்களுக்கு அன்வார் தலைமையிலான மடானி அரசு எதுவுமே செய்யவில்லை என பெரிக்காத்தான் கூட்டணிக் கட்சிகள் அறிக்கைக்கு மேல் அறிக்கை விட்டு இந்தியர்களைக் குழப்பி வருவதையும் Taufiq Johari சுட்டிக்காட்டினார். பெரிக்காத்தான் கூட்டணியில் Gerakan,  Muda, MIPP, PSM, MAP, Perikatan India Muslim Nasional எனும் Iman ஆகிய கட்சிகளில் இந்தியர்கள் இருக்கிறார்கள். பெரிக்காத்தான் ஆளும் மாநிலங்களில் இந்தியர்களுக்கானத் திட்டங்கள் என்ன எனும் கேள்வியை அவர் முன்வைக்க வேண்டும் என சுங்கை பெட்டாணி நாடாளுமன்ற உறுப்பினர் Taufiq Johari கேட்டுக்கொண்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *