பெரிக்காத்தானில் ம.இ.கா & ம.சீ.ச! அவசரம் வேண்டாம்! பொறுமை...பொறுமை..! – MIPP வலியுறுத்து!

top-news
FREE WEBSITE AD

செப்டம்பர் 4,

ம.இ.காவும் ம.சீ.சவும் பெரிக்காத்தானில் இணைவது தொடர்பாக இப்போது அவசரப்பட வேண்டாம் என பெரிக்காத்தான் உறுப்புக் கட்சியான மலேசிய இந்திய மக்கள் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. ம.இ.காவும் ம.சீ.சவும் முறைப்படி பெரிக்காத்தானில் இணைவதற்கான விண்ணப்பத்தை இன்னும் வழங்காத நிலையில் அது குறித்து இப்போது அவசர அவசரமாகப் பேச வேண்டிய அவசியம் இல்லை என MIPP எனப்படும் பெரிக்காத்தானின் இந்தியர் கட்சியின் துணைத் தலைவர் S Subramaniam தெரிவித்தார்.

முதலில் அவர்கள் விண்ணப்பம் செய்யட்டும். விண்ணப்பம் செய்த பின்னர் பெரிக்காத்தானின் மத்திய தலைமை குழு விண்ணப்பத்தை ஆராய்ந்த பின்னரே அது குறித்து விவாதிக்கலாம், அதுவரையில் பொறுமையாகவே இருக்கலாம் என S Subramaniam தெரிவித்தார். முன்னதாக ம.இ.காவின் மாநிலப் பிரிவினர் பாரிசானிலிருந்து ம.இ.கா வெளியேற வேண்டும் என அழுத்தம் கொடுத்து  வருவதும், பாஸ் கட்சியின் துணைத் தலைவர் Tuan Ibrahim Tuan Man ம.இ.காவையும் ம.சீ.சவையும் பெரிக்காத்தானில் சேரும்படி வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *