பெரிக்காத்தான் தலைவர்களுடன் முகைதீன் ரகசிய சந்திப்பு! ஹம்சாவுக்கு அழைப்பில்லை!

top-news
FREE WEBSITE AD

ஜனவரி 29,

முன்னாள் பிரதமரும் முன்னாள் பெரிக்காத்தான் தலைவருமான முகைதீன் யாசின் இன்று இரவு பெரிக்காத்தான் உறுப்புக் கட்சியின் தலைவர்களுடன் ரகசிய சந்திப்பை மேற்கொள்ளவிருப்பதாகச் செய்திகள் கசிந்த நிலையில் முகைதீன் தம்மை அப்படியானக் கூட்டத்திற்கு அழைக்கவில்லை என எதிர்கட்சித் தலைவரும் பெர்சத்து துணைத் தலைவருமான Datuk Seri Hamzah Zainudin இன்று தெரிவித்தார். பெரிக்காத்தானின் அடுத்த தலைவர் யார் என்பது குறித்து நெருக்கடிகள் நிலவும் இந்த சூழலில் முகைதீன் கட்சித் தலைவர்களைச் சந்திப்பது சாதாரணமானச் சந்திப்பாகக் கருத முடியாது என்றாலும் எனக்கு அப்படியான எந்த அழைப்பும் கிடைக்கவில்லை என Datuk Seri Hamzah Zainudin தெரிவித்தார்.

ஒரு கூட்டம் நடைபெறுகிறது என்றால் அதற்கான அழைப்பு இருக்க வேண்டும் என Datuk Seri Hamzah Zainudin தெரிவித்தார். அப்படியான அழைப்பு இல்லாமல் கூட்டத்தில் எப்படி நான் பங்கேற்பது என அவர் கேள்வி எழுப்பினார். முகைதீன் அப்படி ரகசியமாகச் சந்திப்பு நடத்த விரும்புவதைத் தாம் மறுக்கவில்லை. ஆனால் சந்திப்பு உண்மையா என்றும் எனக்குதெரியாது. நேற்று பெரிக்காத்தானின் உச்சமன்றக் கூட்டம் இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதை அடுத்து பெரிக்காத்தானின் தலைமையை வகிக்கும் நபர் யார் எனும் கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. நாட்டின் பிரதான எதிர்க்கட்சிக் கூட்டணியாக இருக்கும் பெரிக்காத்தானில் தலைவர் இல்லாதது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் பலத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *