அழுகிய பெரிக்காத்தானைக் கலைப்பது நல்லது! – அம்னோ அறிவுரை!
- Thinagaren Sanggaren
- 30 Dec, 2025
டிசம்பர் 30,
முன்னாள் பிரதமர் Tan Sri Muhyiddin Yassin பெரிக்காத்தான் கூட்டணித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து பாஸ் கட்சி பெரிக்காத்தான் கூட்டணியைக் கைப்பற்றுவதை விடவும் புதிய கூட்டணியை உருவாக்குவது நல்லது என அம்னோ உச்சமன்ற உறுப்பினர் Datuk Dr. Puad Zarkashi தெரிவித்தார். முகைதீன் விலகிவிட்டதால் பெரிக்காத்தான் தலைமைக்குப் பாஸ் கட்சி குறி வைத்தாலும் அதன் மற்ற கூட்டணிக் கட்சிகளின் அழுத்தத்தைப் பாஸ் கட்சி சமாளிக்க வேண்டி வரும் என ஜொகூர் மாநிலச் சபாநாயகருமான Datuk Dr. Puad Zarkashi நினைவூட்டினார்.
பெரிக்காத்தான் ஒரு வலுவானக் கூட்டணி அல்ல. அழுகிய பழமாகிவிட்ட பெரிக்காத்தானைக் கலைத்துவிட்டு புதிய கூட்டணியை எதிர்கட்சிகள் அமைப்பது மட்டுமே தொடர்ந்து அரசியல் நடத்த முடியும் என Datuk Dr. Puad Zarkashi தெரிவித்தார். பதவி விலகியிருக்கும் முகைதீனுக்கு நன்றாகவே தெரியும். பாஸ் கட்சியின் அடுத்த நடவடிக்கை பெரிக்காத்தானுக்கு எதிராகத் திரும்பும் முன்னரே முகைதீன் விலகிவிட்டார். இது சபாவின் தேர்தல் தோல்விக்குப் பின்னர் நிகழ்ந்திருக்க வேண்டியது. ஆனால் இப்போது தாமதமாகவில்லை. பெரிக்காத்தானைக் கலைத்து விட்டு, பாஸ் கட்சி தலைமையில் புதிய கூட்டணியை அமைப்பது பாஸ் கட்சியின் அரசியல் எதிர்காலத்திற்கு நல்லது என Datuk Dr. Puad Zarkashi தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



