பெரிக்காத்தானின் பிரதமர் வேட்பாளர் யார்? அடுத்த வாரம் சொல்கிறேன்! – முகைதீன்!
- Thinagaren Sanggaren
- 15 Sep, 2025
செப்டம்பர் 15,
பெரிக்காத்தானின் பிரதமர் வேட்பாளர் குறித்து அதன் கூட்டணிக் கட்சிகளான பெர்சத்துவுக்கும் பாஸ் கட்சிக்கும் பனிப்போர் நிலவும் நிலையில் பெரிக்காத்தானின் பிரதமர் வேட்பாளர் அடுத்த வாரம் உறுதி செய்யப்படுவார் என முன்னாள் பிரதமரும் பெரிக்காத்தான் கூட்டணித் தலைவருமான Tan Sri Muhyiddin Yassin இன்று தெரிவித்தார். பாஸ் கட்சியின் 71 ஆவது ஆண்டுப் பேராளர் மாநாட்டில் 70 வயதுக்குற்பட்டவர் பிரதமராக வேண்டும் என பாஸ் கட்சியின் தலைவர் Tan Sri Abdul Hadi Awang தெரிவித்ததிருந்ததில் எந்தவொரு சிக்கலும் இல்லை என்றும் பெரிக்காத்தான் கூட்டணியின் மிகப்பெரிய அங்கமாக இருக்கும் பாஸ் கட்சிக்குப் பிரதமர் வேட்பாளர் குறித்து கருத்து தெரிவிக்க எல்லா உரிமையும் உள்ளது என முகைதீன் தெரிவித்தார்.
பெர்சத்துவின் மாநாட்டில் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது, அதே போல பாஸ் கட்சியின் மாநாட்டில் பிரதமர் வேட்பாளர் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த தீர்மானங்கள் தனித்தனியாக வெவ்வெறு கோணங்களில் இருந்தாலும் இதனை முடிவு செய்வது பெரிக்காத்தான் கூட்டணியின் தலைமை, அந்த தலைமையில் பாஸ் கட்சியும் பெர்சத்து கட்சியும் சரிக்குச் சமமாக இடம்பெறுவார்கள் என முகைதீன் விளக்கமளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



