பெரிக்காத்தானின் பிரதமர் வேட்பாளராகச் சம்சூரியை ஏற்கிறேன்! ஆனால்......முகைதீன் கருத்து!
- THINAGAREN SANGGAREN
- 06 Mar, 2026
மார்ச் 6,
பெரிக்காத்தானின் புதிய தலைவரான Ahmad Samsuri Mokhtar பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் அதை ஏற்பதாக முன்னால் பிரதமரும் பெர்சத்து தலைவருமான முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார். ஆனால் Ahmad Samsuri Mokhtarக்கு இன்னும் அனுபவம் தேவை என்பதால் அவர் முயற்சி செய்யலாம் என முகைதீன் தெரிவித்துள்ளார். பெரிக்காத்தானின் தலைவராக நான் இருந்த காலத்தில் நான் தான் பிரதமர் வேட்பாளர் என நான் அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. ஏனெனில் பெரிக்காத்தானின் கூட்டணிக் கட்சிகளே பெரிக்காத்தானின் பிரதமர் வேட்பாளரை முடிவு செய்யும் என முகைதீன் தெரிவித்தார்.
பெரிக்காத்தான் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பிரதமர் வேட்பாளராக இருந்தால் அது சிறப்பாக இருக்கும். பிரதமர் ஒரு கட்சியின் தலைவராக இருந்தால் ஆட்சி அதிகாரத்தின் போது கட்சியின் உறுப்பினர்கள் அவருடைய கட்டுப்பாட்டில் இருப்பார்கள். அதனால் ஆட்சியில் தேவையற்ற சர்ச்சையும் ஏற்படாது என முகைதீன் வலியுறுத்தினார். திரங்கானுவின் மெந்திரி பெசாராக இருக்கும் Ahmad Samsuri Mokhtar மாநிலத்தைச் சிறப்பாக வழிநடத்தி வருகிறார். ஆனால் பல மாநிலங்களையும் ஒருங்கிணைக்கும் ஒரு பெரிய பொறுப்பு பிரதமர் பொறுப்பு. அதற்கு துணை அமைச்சர், அமைச்சர், மேலவை உறுப்பினர், என அடிப்படை கூட்டரசு ஆட்சி அனுபவங்கள் அவசியம் என்பதையும் முகைதீன் வலியுறுத்தினார்,
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



