எதிர்க்கட்சியினரை அலட்சியப்படுத்தும் மடானி அரசாங்கம்! – பெரிக்காத்தான் ஆதங்கம்!
- Thinagaren Sanggaren
- 04 Aug, 2025
ஆகஸ்ட் 4,
மடானி அமைச்சரவையிலிருக்கும் அமைச்சர்கள் தொடர்ந்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை உதாசினப்படுத்துவதாகப் பாஸ் கட்சியின் கோத்தா பாரு நாடாளுமன்ற உறுப்பினர் Datuk Seri Takiyuddin Hassan குற்றம் சாட்டினார். அமைச்சர்களுக்குப் பல முறை பெரிக்காத்தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதங்கள் அனுப்பினாலும் எந்தவொரு பதில் கடிதமும் வழங்காமல் இருப்பதாக இன்று நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் Datuk Seri Takiyuddin Hassan சுட்டிக்காட்டினார். எதிர்க்கட்சியினரின் கேள்விகளை நாடாளுமன்றத்தில் மட்டுமே கேட்க வேண்டும் என்கிற எந்தவோர் அவசியமுமில்லை என்பதை அமைச்சர்கள் உணர வேண்டும் என Datuk Seri Takiyuddin Hassan வலியுறுத்தினார்.
குறிப்பிட்ட அமைச்சரவைக்கு மின்னஞ்சல் மூலமாக மக்கள் நலத்திட்டங்கள் குறித்து மின்னஞ்சல் மூலமாகத் தொடர்புக் கொண்ட போதும் எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை. நேரடியாக அமைச்சர்களின் அலுவலகத்திற்குச் சென்றாலும் அலுவலகத்தில் அமைச்சரும் இல்லை துணை அமைச்சரும் இல்லை என்கிற பதிலை மட்டுமே அதிகாரிகளிடமிருந்து பெறுவதால் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிகுந்த அதிருப்தியில் இருப்பதாக Datuk Seri Takiyuddin Hassan தெரிவித்தார்.அமைச்சர்கள் எதிர்க்கட்சியினரைச் சந்திக்க கூட தயாராக இல்லை என்றும் எதிர்க்கட்சியினரை அலட்சியமாக நடத்துவதாகவும் Datuk Seri Takiyuddin Hassan குற்றம்சாட்டினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



