இஸ்லாமியர் மட்டுமே பிரதமராகவும் பெரிக்காத்தான் தலைவராகவும் பொறுப்பேற்க வேண்டும்! சனூசி உறுதி!
- Thinagaren Sanggaren
- 01 Jan, 2026
ஜனவரி 1,
பெரிகாத்தான் தலைமையில் உள்ள முக்கிய தலைவர்கள் பதவி விலகியதை அடுத்து, யார் பெரிக்காத்தனை வழிநடத்துவார் எனும் கேள்விக்குச் சிறந்த பதில் இஸ்லாமியர் தான் வழிநடத்துவார் என கெடா மெந்திரி பெசார் Datuk Seri Sanusi nor தெரிவித்தார். அடுத்த பொதுத்தேர்தலில் பெரிக்காத்தான் ஆட்சி அமைக்கும் எனும் நம்பிக்கை எனக்கு உண்டு. பெரிக்காத்தான் தலைவராக இருப்பவருக்குப் பிரதமராகும் வாய்ப்பு அதிகம் உள்ளதால் பெரிக்காத்தானை இஸ்லாமியர் ஒருவரின் தலைமையில் இயங்க வேண்டும் என சனூசி தெரிவித்தார்.
அப்படியான இஸ்லாமியர் பாஸ் கட்சியிலிருந்து வர வேண்டுமா என்பதைப் பெரிக்காத்தான் உறுப்புக் கட்சிகள் முடிவெடுக்கட்டும். ஆனால் பெரிக்காத்தான் தலைவராக இஸ்லாமியர் மட்டுமே இருக்க வேண்டும் என்பதில் பாஸ் கட்சி உறுதியாக இருப்பதாகச் சனூசி தெரிவித்தார். நாட்டை இஸ்லாமியர் மட்டுமே தலைமையேற்க வேண்டும் என்பதில் பாஸ் கட்சி உறுதியாக இருப்பதால் இஸ்லாத்திற்கு முன்னுரிமை அளிக்கும் தலைவர் பெரிக்காத்தானை வழிநடத்துவார் என சனூசி விளக்கமளித்தார்.
மலேசியா மட்டுமல்ல், உலகத் தலைவர்களாகவும் இஸ்லாமியர்கள் இருக்க வேண்டும் என்பதில் பாஸ் கட்சி உறுதியாக இருக்கிறது. இஸ்லாத்தின் மகத்துவம் அறியாதவர்கள் தலைவராகினால் உலக அமைதி சீர்குலையும் என்றும் உலக நாடுகளில் அமைதி நிலைத்திருக்க இஸ்லாம் எல்லா வகையிலும் பொருத்தமானது என்று பெரிக்காத்தானின் தேர்தல் குழு தலைவருமான Datuk Seri Sanusi nor தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



