ABDUL HADI AWANG பெரிக்காத்தான் தலைவராகமாட்டார்!

top-news
FREE WEBSITE AD

ஜனவரி 26,

பாஸ் கட்சியின் தலைவர் Tan Sri Abdul Hadi Awang பெரிக்காத்தானின் தலைவராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடி அவாங் பெரிக்காத்தான் தலைவராகமாட்டார் என பெரிக்காத்தான் துணைப் பொதுச் செயலாளரும் பாஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான Datuk Seri Takiyuddin Hassan உறுதிப்படுத்தினார். முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் பெரிக்காத்தான் தலைவர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து பெரிக்காத்தானின் அடுத்த தலைவர் குறித்தான ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் அதற்காகப் பெரிக்காத்தான் செயற்குழு தயாரித்துள்ள பெயர் பட்டியலில் Tan Sri Abdul Hadi Awang பெயர் இல்லை என Datuk Seri Takiyuddin Hassan இன்று தெரிவித்தார்.

பெரிக்காத்தானின் தலைவராக நியமிக்கப்படுபவர் அதன் கூட்டணிக் கட்சிகளான பாஸ், கெராக்கான், பெர்சத்து, MIPP ஆகிய கட்சிகளின் தலைவராக இருக்க வேண்டும் என்கிற எந்த அவசியமும் இல்லை என்றும் பெரிக்காத்தான் தலைமை செயற்குழுவினர்களில் அதிகமானவர்களின் ஆதரவைப் பெற்ற எவரும் பெரிக்க்காத்தான் தலைவராகலாம் என Datuk Seri Takiyuddin Hassan தெரிவித்தார். பாஸ் கட்சியிலிருந்து மட்டும் தான் பெரிக்காத்தானின் அடுத்த தலைவர் வருவார் என்பதையும் உறுதியாகச் சொல்லிவிட முடியாது. பெரிக்காத்தான் தலைவருக்கான பெயர் பட்டியலைச் செயற்குழு ஏற்றுக்கொண்ட பின்னரே தலைவரை அறிவிக்க முடியும் என Datuk Seri Takiyuddin Hassan தெரிவித்தார்.

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *