பெரிக்காத்தான் MP-க்கள் பள்ளிக்கூடங்களுக்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது! – பெரிக்காத்தான் குற்றச்சாட்டு!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 21 

பெரிக்காத்தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பள்ளிகளின் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் பங்கேற்க கல்வி அமைச்சு தொடர்ந்து அனுமதிக்காமல் இருப்பதாக TANAH MERAH நாடாளுமன்ற உறுப்பினர் DATO SRI IKMAL HISHAM இன்று நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டினார். பள்ளிகளில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்காகப் பள்ளி தொடர்பான நிர்வாகத்தினர் எங்களிடம் நிதி வேண்டும் என கோரிக்கைகளை முன் வைக்கும் போது அதை மறுக்காமல் எங்கள் சொந்த பணத்தை நிதியாகக் கொடுத்து வரும் சூழல் ஏற்பட்டிருப்பதாக TANAH MERAH நாடாளுமன்ற உறுப்பினர் DATO SRI IKMAL HISHAM தெரிவித்தார்.

ஆனாலும் பள்ளியின் நிகழ்ச்சிகளில் நாங்கள் பங்கேற்பதற்காக மாவட்ட அல்லது மாநிலக் கல்வி இலாகாவிடம் பள்ளி நிர்வாகம் ஒப்புதல் பெற முயற்சிக்கும் போது கல்வி இலாகா அனுமதி வழங்க மறுப்பதால் பள்ளி நிர்வாகம் சங்கடத்துடன் எங்களை அணுகுவதாக TANAH MERAH நாடாளுமன்ற உறுப்பினர் DATO SRI IKMAL HISHAM தெரிவித்தார். கல்வி அமைச்சு ஒதுக்கும் பள்ளிகளுக்கான நிதி போதுமானதாக இல்லாத போது எங்கள் நாடாளுமன்றத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கு நிதி வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். ஆனால் அந்த பள்ளிகளுக்குள் நுழைய எங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது நியாயமற்றது என TANAH MERAH நாடாளுமன்ற உறுப்பினர் DATO SRI IKMAL HISHAM கல்வி அமைச்சரை நோக்கி கேள்வி எழுப்பினார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *