பெரிக்காத்தானின் தேர்தல் நிதி முறைகேடு! SPRM விசாரிக்க வேண்டும்! – அமானா கட்சி வலியுறுத்து!
- Thinagaren Sanggaren
- 22 Sep, 2025
செப்டம்பர் 22,
கடந்த பொதுத்தேர்தலில் பெரிக்காத்தான் செலவழித்த தேர்தல் நிதி குறித்து லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் துணை அமைச்சரும் அமானா கட்சியின் உதவித் தலைவருமான Datuk Mahfuz Omar வலியுறுத்தினார். 2022 நடைபெற்ற பொதுத்தேர்தலில் பெரிக்காத்தானின் வேட்பாளர்களுக்கு மிகப் பெரிய அளவிலான நிதியைப் பெர்சத்து கட்சி வழங்கியதாகப் பெரிக்காத்தான் தலைவர் முகைதீன் யாசினின் முன்னாள் செயலாளர் Datuk Dr Marzuki Mohamad வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். அந்த தேர்தல் நிதி எங்கிருந்து வந்தது என்பதைப் பெர்சத்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என அமானா கட்சியின் உதவித் தலைவர் Datuk Mahfuz Omar கேள்வி எழுப்பினார்.
2016 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட பெர்சத்து
கட்சிக்கு 6 ஆண்டுகளில் அவ்வளவு பெரிய தொகை எப்படி வந்தது எனும் சந்தேகத்தை Datuk
Mahfuz Omar எழுப்பினார். பாஸ் கட்சியின் வேட்பாளர்களுக்கு
ஆதரவாகப் பெர்சத்துவின் நிதி பயன்படுத்தப்பட்டிருப்பதாகப் பெர்சத்து கட்சி தெரிவிக்கிறது.
எந்தவொரு நிதியையும் பெறவில்லை என பாஸ் கட்சி மறுக்கிறது. அப்படியானால் தேர்தல் நிதி எங்கே யாருக்குப் போனது என்பதை லஞ்ச ஊழல்
தடுப்பு ஆணையம் விசாரிக்க வேண்டும் என Datuk Mahfuz Omar கேட்டுக்கொண்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



