பேர்லி-தினா: ஆண்டுக்குத் தலா ஒரு மில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம்!
- Muthu Kumar
- 10 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 10-
மலேசிய மகளிர் இரட்டையர் பூப்பந்து வீராங்கனைகளான பேர்லி டான், எம். தினா ஆகியோர் மலேசிய பேட்மிண்டன் சங்கத்துடன்
புதிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் வரை ஒருவருக்கு ஆண்டுக்கு 1 மில்லியன் ரிங்கிட் சம்பளம் பெறுவார். டிசம்பர் 2024 இல் முந்தைய ஒப்பந்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அவர்களின் எதிர்காலம் குறித்த ஊகங்கள் முடிவுக்கு வந்தன.
உலக தரவரிசையில் மூன்றாம் இடத்தில் உள்ள பேர்லி-தினா முன்பு ஒருவருக்கு ஆண்டுக்கு 2 மில்லியன் ரிங்கிட் என்ற பேட்மிண்டன் சங்கத்தின் முதன்மை வீரர்களுக்கு இணையான சம்பள கோரிக்கையை முன்வைத்திருந்தனர். ஆனால், மலேசிய பூப்பந்து சங்கத்தின் தலைவர் டத்தோஸ்ரீ தெங்கு ஸாப்ருல் அப்துல் அஸிஸுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அவர்கள் குறைவான ஆனால் கணிசமான தொகையை ஏற்றுக்கொண்டனர்.
பூப்பந்து சங்கத்துடன் தொடர்ந்து இணைந்திருப்பது பயிற்சி வசதிகள், ஆதரவு ஆகியவற்றை உறுதி செய்கிறது. இது மலேசியாவின் முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வெல்லும் முயற்சியில் முக்கியமானது.பேர்லி-தினா ஜூலை 15 முதல் 20 வரை நடைபெறும் சூப்பர் 750 ஜப்பான் ஓபனில் பங்கேற்கவுள்ளனர். மேலும் ஒப்பந்தத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதற்கு முன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் தாய்லாந்து ஓபனை வென்ற இந்த ஜோடி, சர்வதேச அரங்கில் தங்கள் ஆட்டத்தை மேம்படுத்துவதற்கு முனைப்புக் காட்டி வருகின்றனர். பேர்லி-தினாவின் இந்த முடிவு, மலேசியாவுக்கு உலக அரங்கில் பெருமை சேர்க்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
Pearly-Tina, pemain beregu wanita badminton Malaysia, menandatangani kontrak baru bersama BAM hingga Olimpik 2028. Mereka terima RM1 juta setahun seorang. Keputusan ini penting untuk latihan serta misi pingat emas Olimpik. Mereka bakal sertai Terbuka Jepun bulan ini.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



