ஸ்கிம் கெம்பாரா காலத்திற்கு ஏற்ற திட்டம்- ஜொகூர் இந்திய தொழில்முனைவோர் கூட்டுறவு பேரவை
- Tamil Malar (Reporter)
- 23 Dec, 2025
கோலாலம்பூர், டிச. 23-
சிங்கப்பூருக்கு தினசரி சென்றுவரும் மலேசிய தொழிலாளர்களுக்குச் சமூக பாதுகாப்பை விரிவுபடுத்தும் ஸ்கிம் பெங்கெம்பாரா (Skim Pengembara) திட்டம் தற்கால தேவைக்கு ஏற்றது என்று கருதப்படுகிறது.
ஜோகூர் இந்திய தொழில்முனைவோர் கூட்டுறவு பேரவை (KUIJB) தலைவர் எஸ். ஆனந்தன், மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஆர். ரமானன் வெளியிட்ட அறிவிப்புக்கு முழு ஆதரவு தெரிவித்தார். அமைச்சர், பெர்கேசோ (PERKESO) அமைப்புக்கு சுமார் 4 இலட்சம் மலேசியர்களுக்குச் சமூக பாதுகாப்பு விரிவாக்கத்தை உத்தரவிட்டுள்ளார். இதில் சிறு தொழில்முனைவோர், திறன் வல்லுநர்கள், கூட்டுறவு உறுப்பினர்களும் அடங்குவர்.
"சிங்கப்பூருக்கு தினசரி செல்லும் மலேசியர்களுக்குச் சமூக பாதுகாப்பு விரிவாக்கத்தை மடானி அரசு மேற்கொள்ளும் முயற்சிக்கு நாங்கள் முழு ஆதரவு அளிக்கிறோம்.
"எல்லை தாண்டிய தொழிலாளர்களின் நலன், பாதுகாப்பு, எதிர்காலம் உறுதிப்படுத்தப்படும் இந்த நடவடிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது" என்று எஸ்.ஆனந்தன் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



