வெளிநாட்டினர் நுழைவு அனுமதி: மலேசியர்களின் நலனுக்கு பாதிப்பு இல்லை – உள்துறை அமைச்சர் விளக்கம்
- Tamil Malar (Reporter)
- 26 Feb, 2026
கோலாலம்பூர், பிப். 26-
வெளிநாட்டு நபர்களுக்கு வழங்கப்படும் நுழைவு அனுமதி (Permit Masuk) மலேசியர்களின் வேலை வாய்ப்பு மற்றும் நலன்களுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுதீன் நசூதின் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அமைச்சரவை கேள்வி நேரத்தில் அவர் கூறியதாவது, 1963ஆம் ஆண்டின் குடிநுழைவு ஆணைச் சட்டத்தின் (Jadual Perintah Imigresen 1963) கீழ் கடுமையான நிபந்தனைகள் மற்றும் தகுதிச்சான்றுகளின் அடிப்படையில் மட்டுமே வெளிநாட்டவர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. குறிப்பாக தொழில்முறை தகுதி, சிறப்பு நிபுணத்துவம் மற்றும் நாட்டிற்கு மதிப்புக் கூட்டும் திறன் கொண்டவர்களே தேர்வு செய்யப்படுகிறார்கள் என்றார்.
“இவர்கள் வருகை உள்ளூர் திறமைகளை பாதிக்காது. மாறாக, அவர்களின் தொழில்நுட்ப அறிவும் அனுபவமும் உள்ளூர் பணியாளர்களுக்கு கற்றுக்கொள்ளும் வாய்ப்பை உருவாக்கும். இது நாட்டின் உயர்திறன் துறைகளில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்,” என்று அமைச்சர் விளக்கினார்.
மேலும், இந்த அனுமதி வழங்கும் செயல்முறை மிகவும் கடுமையான வழிகாட்டுதல்களின் கீழ் நடைபெறுகிறது என்றும், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், உயர்தர முதலீடுகளுக்கும் ஆதரவாக இருக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



