கைரி ஜமாலுடின் வழக்கு செஷன் நீதிமன்றத்துக்கு மாற்றம் – உயர்நீதிமன்றம் உத்தரவு
- Tamil Malar (Reporter)
- 30 Mar, 2026
கோலாலம்பூர், மார்ச் 30-
முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தாக்கல் செய்ய உள்ள அவதூறு வழக்கை அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
அம்னோ சுங்கை பெசார் பிரிவு தலைவர் டத்தோ ஸ்ரீ ஜமால் யூனோஸுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு பொருந்தாது என்று நீதிபதி டத்தோ ஆனந்த் பொன்னுதுரை தெரிவித்தார்.
உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்குகள் பொதுவாக 1 மில்லியனை மீறும் இழப்பீட்டு தொகையை உள்ளடக்கியிருக்க வேண்டும் என்பதால், இந்த வழக்கை செஷன் நீதிமன்றத்திற்கு மாற்ற உத்தரவிடப்பட்டதாக அவர் கூறினார்.
பிரதிவாதியான ஜமாலை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் வி முகுந்தன், தனது கட்சிக்காரர் மன்னிப்பு கோர தயாராக இருந்தாலும், மனுதாரர் இழப்பீடு தொகையையும் கோரியுள்ளார் என்றார்.
“மனுதாரர் 1 மில்லியன் அளவிலான இழப்பீட்டை பெற வாய்ப்பு இல்லை என்பதால், வழக்கு செஷன் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது,” என்று அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



