பாங்காக்கில் அம்னோ தலைவருடன் சந்திப்பு – அரசியல் நோக்கம் இல்லை என தகியுடின் விளக்கம்
- Surendran Sumdraraj
- 12 Mar, 2026
கோத்தா பாரு, மார்ச் 12-
பாஸ் பொதுச்செயலாளர் டத்தோ ஸ்ரீ தகியுடின் ஹாசான், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தாய்லாந்தின் பாங்காக்கில் அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடியைச் சந்தித்ததை உறுதிப்படுத்தினார்.
அவர் கூறுகையில், அந்த சந்திப்பில் தன்னுடன் மலேசியாவின் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ ஹம்ஸா ஜைனுடினும் கலந்து கொண்டதாகத் தெரிவித்தார்.
எனினும், அந்த சந்திப்பு வெறும் சாதாரண கலந்துரையாடலாக இருந்ததாகவும், அதற்கு எந்த அரசியல் நோக்கமும் இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார். குறிப்பாக சிலர் கூறும் போல ‘பாங்காக் மூவ்’ அல்லது அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சி எதுவும் இதில் இடம்பெறவில்லை என்றும் அவர் மறுத்தார்.
அவர் மேலும் கூறுகையில், அந்த சந்திப்பு குறித்து பல்வேறு ஊகங்கள் பரவியுள்ள நிலையில், உண்மையில் அது சாதாரண உரையாடலாக மட்டுமே நடந்தது என்றும், அரசியல் மாற்றம் அல்லது புதிய கூட்டணி உருவாக்கம் குறித்து எந்தத் திட்டமும் பேசப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



