STR, SARA உதவித் திட்டங்களுக்கு 15 பில்லியன் நிதி ஒதுக்கீடு

top-news

கோலாலம்பூர், ஜன. 28-

சும்பாங்கான் துணை ரஹ்மா (STR), சும்பாங்கான் ஆசாஸ் ரஹ்மா (SARA) உதவித் திட்டங்களுக்கான மொத்த நிதி ஒதுக்கீடு இந்த ஆண்டு  15 பில்லியனாக உயர்ந்துள்ளதாக நிதி துணை அமைச்சர் லியூ சின் தொங் தெரிவித்தார். இது 2022 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட 8 பில்லியனுடன் ஒப்பிடுகையில், இரட்டிப்புக்கு நெருக்கமான அதிகரிப்பாகும்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வாய்மொழி கேள்வி நேரத்தில், PH–சிபு நாடாளுமன்ற உறுப்பினர் ஒஸ்கார் லிங் சாய் யூ எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இதனை கூறினார். STR,  SARA திட்டங்களுக்கு ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நிதி ஒதுக்கீடு, சமூக பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்த அரசின் உறுதியான அர்ப்பணிப்பை தெளிவாகக் காட்டுகிறது என அவர் வலியுறுத்தினார்.

குறிப்பாக 2023 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட SARA திட்டம், இலக்குவைத்து உதவி வழங்கும் ஒரு பயனுள்ள வழிமுறையாக செயல்படுகிறது. தேவையுள்ள குடும்பங்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு அத்தியாவசிய செலவுகளுக்கான உதவியை நேரடியாக வழங்க இந்தத் திட்டம் பயன்படுகிறது என்றார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *