மித்ராவுக்குக் கூடுதலாக 50 மில்லியன் வழங்கப்பட்டதை ஆதரிக்கின்றோம்! ஆனால்...?
- Surendran Sumdraraj
- 13 May, 2026
மலாக்கா, மே 13-
பிரதமர் அன்வார் மலேசிய இந்தியர் உருமாற்றுப் பிரிவான மித்ராவுக்குக் கூடுதலாக RM 50 மில்லியர் நிதி வழங்கியிருப்பதை ஆதரித்தாலும் முக்கிய கேள்விகள் எழுந்திருப்பதாக மலாக்கா ஜாசின் மாவட்டப் பி.கே.ஆர் இளைஞர் பகுதி தலைவர் திவாகர் வாஜன் தெரிவித்தார்.
ஊடக அறிக்கை :
இந்திய சமூகத்தின் முன்னேற்றத்திற்காக மித்ராவிற்கு கூடுதலாக RM50 மில்லியன் ஒதுக்கப்பட்டு, மொத்த நிதி RM150 மில்லியனாக உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க ஒன்று. இந்த முயற்சிக்கு பிரதமர் மற்றும் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கிறோம்.
ஆனால், இதே நேரத்தில் ஒரு முக்கியமான கேள்வியும் எழுகிறது. கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட RM100 மில்லியன் எந்த அமைப்புகள், கோவில்கள், கல்வி திட்டங்கள், அரசு சாரா அமைப்புகள் (NGO), சமூக மேம்பாட்டு திட்டங்கள் ஆகியவற்றிற்கு வழங்கப்பட்டது? அந்த நிதி உண்மையாக இந்திய சமூகத்திற்கு பயன் அளித்ததா? திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்பட்டனவா?
எனவே, மித்ரா நிர்வாகம் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் கடந்த ஆண்டின் அனைத்து நிதி விபரங்களையும், பெறுநர் பட்டியலையும், திட்ட அறிக்கைகளையும் பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
அரசாங்கம் இந்திய சமூகத்திற்காக ஒதுக்கும் ஒவ்வொரு நிதியும் மிக மதிப்புமிக்கது. அது சரியான இடத்திற்கும், உண்மையாக தேவைப்படுவோருக்கும் சென்றடைகிறதா என்பதை மக்கள் அறிய உரிமை உண்டு.
வெளிப்படைத்தன்மை இருந்தால் நம்பிக்கை வளரும். நம்பிக்கை இருந்தால் சமூக முன்னேற்றம் உறுதி.
திவாகர் வாஜன்
இளைஞர் பகுதி தலைவர்
மக்கள் நீதி கட்சி ஜாசின், மலாக்கா
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



