எதிர்க்கட்சிகளுக்கான நிதி தாமதத்திற்குப் பெரிக்காத்தான் MP-க்களின் மொத்தனமே காரணம்! – அன்வார் விளக்கம்!

top-news
FREE WEBSITE AD

ஆகஸ்ட் 5, 

பெரிக்காத்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கம் நிதியை வழங்க மறுப்பதாகத் தெரிவிக்கப்படுவதில் எந்தவோர் அடிப்படை காரணமும் இல்லை என பிரதமர் அன்வார் இன்று விளக்கமளித்தார். எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்தவொரு நிதி விண்ணப்பக் கோரிக்கையையும் இதுவரையில் சமர்ப்பிக்கவில்லை. எந்தவொரு கோரிக்கையும் சமர்ப்பிக்கப்படாமல் நிதி வேண்டும் என்றால் எந்த முகாந்தரத்தின் அடிப்படையில் நிதியை வழங்குவது? அந்த நிதியைப் பயன்படுத்துவதற்கான அதிகாரத்தை யாருக்கு வழங்குவது என பிரதமர் அன்வார் எதிர்க்கட்சியை நோக்கி கேள்விகளை எழுப்பினார்.

வீணாக அரசாங்கத்தின் மீது பழி சுமத்த வேண்டாம். மக்கள் நலத்திட்டங்களுக்கான அரசு நிதியைத் தாமதப்படுத்துவதில் அரசாங்கத்திற்கு விருப்பமில்லை. ஆனால் விண்ணப்பமே இல்லாமல், திட்டமே இல்லாமல் எந்த நிதியை யாருக்கு வழங்குவது என அன்வார் வினவினார். இதுவரையில் எதிர்க்கட்சியிலிருந்து மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் Syed Saddiq மட்டுமே நிதி விண்ணப்பத்தை வழங்கியிருந்ததாகவும் அதற்கான நிதியும் வழங்கப்பட்டுள்ளதை அன்வார் சுட்டிக்காட்டினார். அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் சரி எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் சரி. அரசாங்கத்தின் நிதியைப் பெற வேண்டும் எனில் அதற்கு ஒரே வழி திட்டங்களுக்கான கோரிக்கை. உங்கள் கோரிக்கையை முழுமையாக அரசுத் தரப்புக்கு வழங்கி பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நிதி தடையில்லாமல் வழங்கப்படும் அதை விடுத்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நிதியை அரசாங்கம் வழங்கவில்லை என பொய் குற்றச்சாட்டுகளை முன் வைக்க வேண்டாம் என பிரதமர் அன்வார் வலியுறுத்தினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *