போலி ஆவணம் மூலம் 50,000 வெள்ளி கையாடல் – ஓய்வு பெற்ற அரசு ஊழியர் மீது குற்றச்சாட்டு

top-news
FREE WEBSITE AD

ஷா ஆலாம், ஏப். 6-

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு  ஸ்ரீ சக்தி ஈஸ்வரி ஆலயத்தின் பராமரிப்பு பணிகளுக்காக 50,000 வெள்ளி போலி ஆவணத்தை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவர் இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

65 வயதான எம். திருசெல்வம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்து, தன்னை குற்றமற்றவர் என தெரிவித்தார்.  நீதிபதி டத்தோ முகமட் நாசிர் நொர்டின் முன்னிலையில் வாசிக்கப்பட்டது.

குற்றப்பத்திரிகையின் படி, 15 நவம்பர் 2021 தேதியிட்ட 50,000 வெள்ளி மதிப்புள்ள இன்வாய்ஸை உண்மையான ஆவணமாக பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த இன்வாய்ஸ், ‘புதிய யாகசாலை அனுமதி ஆலோசனை, பூர்விக அம்மன் ஆலயத்தில் ஏற்பட்ட கசிவு பிரச்சினைகளை சரிசெய்தல் மற்றும் முக்கிய ஆலயமான விநாயகர் சன்னதி, ஈஸ்வரி சன்னதி, முருகன் சன்னதிகளில் ஏற்பட்ட கசிவுகளை சரிசெய்தல்’ போன்ற பணிகளுக்காகக் கோரிக்கை செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அந்த இன்வாய்ஸ் 22 நவம்பர் 2021 அன்று 64 வயதுடைய ஆலய செயலாளரிடம் ஆலய வளாகத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற உள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *