கள்ளத்தனமாக மலேசியாவுக்குள் நுழைந்த 6 வெளிநாட்டினர்கள் கைது!
- Thinagaren Sanggaren
- 17 Sep, 2025
செப்டம்பர் 17,
கடப்பிதழ் இல்லாமல் மலேசியாவுக்குள் நுழைந்த 6 வெளிநாட்டினர்களை எல்லை பாதுகாப்புச் சிறப்புப் படையான PGA கைது செய்துள்ளது. அதிகாலை 6.30 மணிக்கு மலேசியா தாய்லாந்து எல்லை பகுதியான Pengkalan Kubor சாலையில் சந்தேகத்திற்குரிய வாகனத்தைக் கண்டதும் PGA அதிகாரிகள் சோதனையிட்டதில் வாகனத்தில் மறைந்திருந்த 4 பெண்களும் 2 ஆண்களும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
PGA அதிகாரிகளைக் கண்டதும் வாகனமோட்டி அருகிலுள்ள ஆற்றில் குதித்து தப்பியதாகவும் வாகனத்திலிருந்த 6 பேரும் மியன்மர் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட 6 பேரிடமும் மலேசியாவுக்குள் நுழைவதற்கான எந்தவோர் ஆவணங்களும் இல்லை என்பதால் மேலதிக விசாரணைக்காக தும்பாட் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக எல்லை பாதுகாப்புச் சிறப்புப் படையான PGA தெரிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



