தாய்லாந்தில் மலேசியாவின் PG.FC அணி 2-ஆவது முறையாகக் கிண்ணத்தை வென்று சாதனை!
- Tamil Malar (Reporter)
- 18 Nov, 2025
செய்தி – வெற்றி மைந்தன்
கோலாலம்பூர், நவ. 18-
தாய்லாந்து புக்கேட்டில் நடைபெற்ற ஐந்தின்மர் கிண்ண கால்பந்து
போட்டியில் மலேசியாவைச் சேர்ந்த பிஜிஎப்சி கால்பந்து அணி தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகக்
கிண்ணத்தை வென்று சாதனை படைத்தது. சீனா, ஜெர்மன், நார்வே, சிங்கப்பூர், இதர நாடுகளைச்
சேர்ந்த 12 குழுக்கள் பங்கேற்ற இந்தப் போட்டியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன்
பட்டத்தை வென்ற பிஜிஎப்சி குழுவுக்கு மிகப் பெரிய வாழ்த்துகள்.
பல்கலைக்கழக நண்பர்கள், சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு இரவு
நேரங்களில் இணைந்து புட்சால் விளையாடினோம். அது முதலில் எங்கள் நட்பை வலுப்படுத்தியது.
பின்பு அந்த நட்பு வட்டம் ஒரே குடும்பம் எனும் உணர்வை வளர்த்து இன்று வெற்றியை நோக்கி
பயணிக்க வைத்துள்ளதாக குழுவின் நிர்வாகி கெளரி சங்கர் தெரிவித்தார்.
மேலும் முதலில் பங்கெடுத்த ஓரிரு போட்டிகளில் தோல்வியை மட்டுமே
சந்தித்தோம். வெற்றி அவ்வளவு எளிதாக எங்களுக்கு கிட்டவில்லை. அதற்காக உழைக்கவும் நாங்கள்
தயங்கவில்லை. இந்த ஆண்டு போட்டிக்காகத் தொடர்ந்து 2 மாதங்கள் பயிற்சி மேற்கொண்டதாகக்
பிஜிஎப்சி கால்பந்து குழுவின் மூத்த ஆட்டக்காரர்களான யோகேஸ்வரன், நீலக்கண்ணா, மோகன்,
விக்கினேஸ்வரன், முரளி, சரா, சுதாகர் ஆகியோர் கூறினார்.
குழு நிலையில் நடைபெற்ற முதல் சுற்று போட்டியில் இரண்டாம்
இடத்தைத் தக்கவைத்த பிஜிஎப்சி அணி, காலிறுதிச் சுற்றில் தங்களது அபாரமான ஆட்டத்திறமையால்
சீனாவைச் சேர்ந்த எதிரணியை வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். மேலும் இறுதி ஆட்டத்தில்
முதலில் இரு கோல்கள் பின்னடைவில் இருந்தாலும் முயற்சியைக் கைவிடாது ஒற்றுமையுடன் போராடியதால்
6-4 என்ற கோல்கணக்கில் கோப்பையைத் தட்டிச் செல்ல முடிந்ததாக அவ்வணியின் இளம் ஆட்டக்காரர்களான
மாரி, ரமணி, ஹர்பன்ஸ் பெருமிதத்தோடு தெரிவித்தனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



