உலகக் கோப்பையில் புதிய விதிகள்
- Tamil Malar (Reporter)
- 21 Jan, 2026
லண்டன், ஜன. 21-
கால்பந்து போட்டிகளின் வேகத்தை அதிகரித்து, நேர வீணாக்கத்தை குறைக்கும் நோக்கில், வரவிருக்கும் உலகக் கோப்பை தொடரில் பல புதிய விதிகள், தொழில்நுட்ப மாற்றங்களை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அனைத்துலக கால்பந்து சங்கங்களின் வாரியம் (IFAB) அறிவித்துள்ளது.
இந்த மாற்றங்களின் கீழ், இரண்டாவது மஞ்சள் அட்டைக்கான (yellow card) முடிவுகள், கார்னர் கிக் (sepakan penjuru) தொடர்பான தீர்மானங்கள், நேர கணக்கீட்டு (timekeeping) அமைப்புகளுக்காக வீடியோ உதவி நடுவர் (VAR) பயன்பாடு விரிவுபடுத்தப்பட உள்ளது. இதன் மூலம், நடுவர் தீர்ப்புகள் விரைவாக வழங்கப்பட்டு, ஆட்டத்தின் ஓட்டம் தடைபடாமல் இருப்பது உறுதி செய்யப்படும் என IFAB தெரிவித்துள்ளது.
மேலும், மாற்றாக வெளியேறும் வீரர்கள் கட்டாயமாக 10 விநாடிகளுக்குள் மைதானத்தை விட்டு வெளியேற வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், அவர்களின் மாற்று வீரர் அடுத்த இடைவேளை வரை மைதானத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார். இது திட்டமிட்ட நேர தாமதங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாகும்.
காயம் அடையும் வீரர்கள், பொதுவாக இரண்டு நிமிடங்கள் மைதானத்திற்கு வெளியே இருக்க வேண்டும். ஆனால் அந்தக் காயம் மஞ்சள் அல்லது சிவப்பு அட்டை வழங்கப்படும் தவறின் காரணமாக ஏற்பட்டிருந்தால், இந்த விதி பொருந்தாது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



