கோலாலம்பூரில் PBT உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் பலருக்கு நன்மை – நிக் நஸ்மி
- Tamil Malar (Reporter)
- 05 Feb, 2026
கோலாலம்பூர், பிப். 5-
கோலாலம்பூரில் உள்ளாட்சி நிர்வாகத் தேர்தல் (PBT) நடைமுறைக்கு வந்தால், அது பல தரப்பினருக்கு நன்மை அளிக்கும் என செத்தியவங்சா நாடாளுமன்ற உறுப்பினர் நிக் நஸ்மி நிக் அகமட் தெரிவித்தார். இதில் எதிர்க்கட்சித் தரப்பினரும், கோலாலம்பூரின் சமூக-பொருளாதார வளர்ச்சியில் பங்கு கொண்டுள்ள பலரும் அடங்குவர் என்றார்.
இதையடுத்து, இந்த விவகாரத்தில் அனைவரும் அமைதியாக இருந்து, அரசியல், இன உணர்வுகளைத் தூண்டும் விதமாக பேசாமல், நிலைமையை ஆழமாக ஆராய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
அவர் கூறியதாவது, கோலாலம்பூரின் மக்கள்தொகை அமைப்பு தற்போது மாற்றமடைந்து வருகிறது. இப்போது நகர மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பூமிபுத்ரா என்பதால், உள்ளாட்சித் தேர்தல் நடைமுறைக்கு வந்தால் அவர்களுக்கும் நேரடி குரல் கிடைக்கும் என்பது உறுதியென தெரிவித்தார்.
மேலும், கோலாலம்பூர் மற்ற மாநிலங்கள் அல்லது நகரங்களைப் போல அல்ல என்றும், இங்குள்ள மேயருக்கு (Datuk Bandar Kuala Lumpur) மிகப் பெரிய அதிகாரம் உள்ளதாகவும் அவர் கூறினார். பிற நகரங்களில் மேயரின் அதிகாரம் இவ்வளவு வலுவாக இல்லாத நிலையில், கோலாலம்பூரில் மேயரின் அதிகாரம் அதிகமாக இருப்பதால், தேர்தல் நடைமுறை நகர மக்களுக்கு முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



