3 சுற்றுலா பேருந்துகள் பறிமுதல்! – தலைநகர்

top-news
FREE WEBSITE AD

ஆகஸ்ட் 21, 

தலைநகரில் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் செயல்பட்டு வந்த பிரபல PINK BAS எனும் சுற்றுலா பேருந்து கோலாலம்பூர் போக்குவரத்து ஆணையத்தால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தலைநகரைச் சுற்றி வரும் PINK BAS சேவைக்கான உரிமம் கடந்த ஜூன் மாதத்துடன் காலாவதியாகியதாகக் கோலாலம்பூர் போக்குவரத்து ஆணையத்தின் இயக்குநர் Hamedi Adam தெரிவித்தார். வழக்கமான சோதனை நடவடிக்கையின் போது இது கண்டறியப்பட்டிருப்பதாகவும் மேலும் சம்மந்தப்பட்ட 3 பேருந்துகளும் PUSPAKOM வாகனப் பரிசோதனையை மேற்கொள்ளவில்லை என்பது தெரிய வந்துள்ளதாக Hamedi Adam தெரிவித்தார்.

இம்மாதிரியான உள்ளூர் சுற்றுலா பேருந்துகள் 3 மாதங்களுக்கு ஒரு முறை அவர்களின் சுற்றுலா பயணிகள் உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டும் என்பதை Hamedi Adam நினைவூட்டினார். சம்மந்தப்பட்ட PINK BAS அதிகமான சுற்றுலா பயணிகளுக்குக் குறைந்த விலையில் கோலாலம்பூரைச் சுற்றிக் காண்பித்தாலும் முறையான உரிமங்கள் இல்லை என்பதால் சமம்ந்தப்பட்ட 3 பேருந்துகளையும் கோலாலம்பூர் போக்குவரத்து ஆணையமான JPJ பறிமுதல் செய்திருப்பதாகவும் சம்மந்தப்பட்ட சுற்றுலா நிறுவனத்திற்கு நோட்டிஸ் வழங்கப்பட்டிருப்பதாகவும் Hamedi Adam தெரிவித்தார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *