பேருந்தை மோதிய சொகுசு கார்! இளைஞர் பலி! பேருந்து ஓட்டுநர் படுகாயம்!
- Thinagaren Sanggaren
- 16 Nov, 2025
நவம்பர் 16,
கட்டுப்பாட்டை இழந்த SPORT CAR பயணிகள் பேருந்தை மோதி விபத்துக்குள்ளானதில் வாகனமோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இன்று காலை 7.40 மணியளவில் மலாக்காவின் Sungai Badau சாலையில் இவ்விபத்து நிகழ்ந்ததாக மலாக்கா மாநில மீட்பு ஆணைய அதிகாரி Mohd Norsyah Salleh தெரிவித்தார். எதிரில் வந்த பயணிகள் பேருந்தை அதிவேகத்தில் வந்த Toyota GR SPORT CAR மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக மலாக்கா மாநில மீட்பு ஆணைய அதிகாரி Mohd Norsyah Salleh தெரிவித்தார்.
வாகனத்திலேயே சிக்கிய வாகனமோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் அவர் 26 வயது உள்ளூர் ஆடவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது, 34 வயது பேருந்து ஓட்டுநர், இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்திருப்பதால் மலாக்கா மருத்துவமனைக்கு மேலதிக சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் விபத்து குறித்தான மேல் விசாரணைகளைக் காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் மலாக்கா மாநில மீட்பு ஆணைய அதிகாரி Mohd Norsyah Salleh தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



