போலிசாரைப் பாராங் கத்தியுடன் துரத்திய ஆடவர் கைது! கோலா லங்காட்டில் பரபரப்பு!
- THINAGAREN SANGGAREN
- 09 Apr, 2026
ஏப்ரல் 9,
உணவகத்திலிருந்து காவல் அதிகாரியைப் பாராங் கத்தியுடன் ஆடவர் ஒருவர் துரத்தும் காணொலி சமூகவலைத்தலங்களில் பரவியதை அடுத்து சம்பவ இடத்திலேயே அவ்வாடவரைக் காவல்துறையினர் கைது செய்ததாகக் Kuala Langat மாவட்டக் காவல் ஆணையர் Mohd Akmalrizal Radzi தெரிவித்தார். இச்சம்பவம் கடந்த செவ்வாய் கிழமை மாலை 3.30 மணிக்குத் தெலுக் பங்லிமா காராங்கில் உள்ள ஓர் உணவகத்தில் நிகழ்ந்ததாகவும் Kuala Langat மாவட்டக் காவல் ஆணையர் Mohd Akmalrizal Radzi தெரிவித்தார்.

சம்பவத்தின் போது உள்ளூர் ஆடவர் ஒருவர் உணவகத்தில் கூச்சலிட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் காவல் நிலையத்திற்கு உணவகத்தின் உரிமையாளரிடமிருந்து அவசர அழைப்பைப் பெற்றதாகவும் சம்பவ இடத்திற்கு விரைந்த ரோந்து பணி காவல் அதிகாரிகள் அவ்வாடவரைக் கட்டுபடுத்த முயற்சித்த போது கோபமடைந்த ஆடவர் போலிசாரை நோக்கி கத்தியுடன் விரட்டியதாக Kuala Langat மாவட்டக் காவல் ஆணையர் Mohd Akmalrizal Radzi விளக்கமளித்தார்.

பொதுமக்களின் உதவியுடன் சம்மந்தப்பட்ட ஆடவரைக் காவல்துறையினர் கைது செய்த நிலையில் உடலில் ஏற்பட்ட காயத்திற்கு ஆடவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் Kuala Langat மாவட்டக் காவல் ஆணையர் Mohd Akmalrizal Radzi தெரிவித்தார். இச்சம்பவத்தின் போது கடையின் பொருள்கள் உட்பட 3 வாகனங்கள் சேதமடைந்திருப்பதாகவும் Kuala Langat மாவட்டக் காவல் ஆணையர் Mohd Akmalrizal Radzi தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *