நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கமா? கட்சிக் கூட்டத்தில் விவாதிப்போம்! - Datuk Fahmi Fadzil
- Thinagaren Sanggaren
- 14 Jul, 2025
ஜுலை 14,
நீதித்துறையின் நியமனங்களில் அரசியல் தலையீடுகள் இருப்பதாக முன்னாள் அமைச்சர் DATUK SERI RAFIZI RAMLI தலைமையில் 9 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்திருக்கும் கருத்து கட்சியின் நெறிமுறைகளை மீறிய செயலா என்பது குறித்து பி.கே.ஆரின் தலைமை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என பி.கே.ஆர் கட்சியின் தலைமை தகவல் தொடர்பாளர் Datuk Fahmi Fadzil விளக்கமளித்தார். இது குறித்து இன்னும் கட்சிக் கூட்டங்களில் எந்தவொரு விவாதமும் நடத்தப்படவில்லை என்பதால் இது குறித்து எந்தவொரு முடிவையும் அறிவிக்க முடியாது என Datuk Fahmi Fadzil தெரிவித்தார்.
முன்னதாக பி.கே.ஆரின் முன்னாள் துணைத்தலைவர் Datuk Seri Rafizi Ramli தலைமையில் பி.கே.ஆரின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்திய போது Datuk Seri Rafizi Ramli இந்த விளக்கத்தை அளித்தார். இன்று Subang நாடாளுமன்ற அலுவகத்தில் Setiawangsa நாடாளுமன்ற உறுப்பினர் Nik Nazmi Nik Ahmad, Ampang நாடாளுமன்ற உறுப்பினர் , Rodziah Ismail. Subang நாடாளுமன்ற உறுப்பினர் Wong Che Wangsa Maju நாடாளுமன்ற உறுப்பினர் Zahir Hassan, Balik Pulau நாடாளுமன்ற உறுப்பினர் Datuk Muhammad Bakhtiar Wan Chik , Ledang நாடாளுமன்ற உறுப்பினர் Syed Ibrahim Syed Noh ஆகியோர் Datuk Seri Rafizi Ramliக்கு ஆதரவாகச் செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டனர். ரபீசியின் தலைமையில் இருக்கும் 9 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது கட்சியின் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்களை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் பி.கே.ஆரின் 19 தொகுதித் தலைவர்கள் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



