Ayer Kuning சட்டமன்ற இடைத்தேர்தல் பெரிக்காத்தான் வேட்பளர்!

- Sangeetha K Loganathan
- 17 Mar, 2025
மார்ச் 17,
பேராக் Ayer Kuning சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களைப் பாரிசான் அறிவிக்கும் முன்னமே பெரிக்காத்தான் அறிவிக்கும் என பெரிக்காத்தான் தேர்தல் குழு தலைவர் Datuk Seri Muhammad Sanusi Md Nor தெரிவித்துள்ளார். Ayer Kuning சட்டமன்ற இடைத்தேர்தலுக்கானப் பெரிக்காத்தான் வேட்பாளர் யார் என்பதைப் பெரிக்காத்தான் முடிவு செய்து வருவதாகவும் அவர் உள்ளூர் நபராக இருப்பதாகவும் எதிர்வரும் 20 மார்ச் பெரிக்காத்தான் வேட்பாளரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவிருப்பதாகவும் Sanusi Md Nor தெரிவித்தார்.
ஏப்ரல் 26 பேராக் Ayer Kuning சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்யப்படும் நிலையில் பெரிக்காத்தான் விரைவாக வேட்பாளரை அறிவித்து தேர்தலுக்கானப் புதிய வியூகத்தை வகுக்கவிருப்பதாக Datuk Seri Muhammad Sanusi Md Nor தெரிவித்தார். இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பைப் பெற பெரிக்காத்தான் முக்கிய செயல்திட்டங்களைக் கொண்டிருப்பதால் முன்கூட்டியே வேட்பாளரை அறிமுகப்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.
Perikatan Nasional akan mengumumkan calon bagi Pilihan Raya Kecil (PRK) DUN Ayer Kuning pada 20 Mac sebelum Barisan Nasional. Datuk Seri Muhammad Sanusi Md Nor menyatakan calon adalah penduduk tempatan dan strategi kempen telah disusun bagi meningkatkan peluang kemenangan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *