ஆட்சிக்கு வந்ததும் தற்பெருமை கொள்ளாதீர்! பி.கே.ஆர் தலைவர்களுக்கு FAHMI FADZIL நினைவூட்டு!
- THINAGAREN SANGGAREN
- 19 Apr, 2026
ஏப்ரல் 19,
பி.கே.ஆர் கட்சி தோற்றுவிக்கப்பட்ட நாள் முதல் அது மக்களுக்கான உரிமைகளை மீட்டெடுக்கும் ஒரு கட்சியாகவே கருதப்பட்டாலும் இப்போது ஆட்சியில் இருப்பதால் பி.கே.ஆர் தலைவர்கள் அலட்சியமாக இருக்க கூடாது என பி.கே.ஆரின் தலைமை தகவல் தொடர்பாளர் Datuk Fahmi Fadzil கட்சியினருக்கு நினைவூட்டினார். மலேசியாவில் பி.கே.ஆர் கட்சியைப் போல வேறு எந்த கட்சியு போராட்டங்களையும் ஏமாற்றங்களையும் துரோகத்தையும் சந்தித்திருக்காது. இதையெல்லாம் கடந்து நாம் இப்போது ஆட்சி அமைத்திருக்கிறோம். ஆட்சியில் அமர்ந்ததும் நாம் கடந்த காலப் போராட்டங்களை மறந்து விட கூடாது என பி.கே.ஆரின் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான Datuk Fahmi Fadzil தெரிவித்தார்.
சிலாங்கூரில் 2008 முதல் பி.கே.ஆர் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் கடந்த 16 ஆண்டுகளாக நாம் தொடர்ந்து மக்களுக்கான நல்லாட்சியை வழங்கி வருகிறோம். இனியும் மக்களின் நல்வாழ்வை உறுதி செய்யும் ஓர் அரசியல் கட்சியாக நாம் செயல்பட வேண்டும் என பி.கே.ஆர் அமைச்சருமான Datuk Fahmi Fadzil வலியுறுத்தினார். அடிமட்டம் முதல் கட்சியின் தலைமை வரையும் நாம் மிகுந்த கண்காணிப்புடன் இருக்க வேண்டும் என்றும் ஆட்சியில் அமர்ந்துவிட்டோம் ஆகையால் அலட்சியமாக இருந்து விடுவோம் என கருத வேண்டாம் என Datuk Fahmi Fadzil பி.கே.ஆர் உறுப்பினர்களுக்கு வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



