பாலஸ்தீனைக் காப்போம்! பி.கே.ஆர் உறுதிமொழி!

- Sangeetha K Loganathan
- 24 May, 2025
மே 24,
பி.கே.ஆர் கட்சித் தேர்தலில் வெற்றிப் பெற்ற அனைத்து உறுப்பினர்களும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை உறுதிமொழியாக ஏற்க வேண்டும் என பி.கே.ஆர் கட்சியின் தலைவரும் பிரதமருமான Datuk Seri Anwar Ibrahim வலியுறுத்தினார். மலேசியா ஒரு சிறிய நாடாக இருந்தாலும் அரசியல் பலம் கொண்ட நாடாகத் திகழ்வதில் அனைத்து கட்சிகளும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இருக்கும் நிலையில் பி.கே.ஆர் கட்சியின் ஒவ்வோர் உறுப்பினர்களும் மனதார பாலஸ்தீனத்தை ஆதரிக்க வேண்டும் என்றும் அதனை உறுதிமொழியாகவும் எடுக்க வேண்டும் என அன்வார் வலியுறுத்தினார்,
காசா பகுதியில் உடனடியாகப் போர் நிறுத்தம் அமல்படுத்த வேண்டுமென வலியுறுத்தும் நாடுகளில் மலேசியா முக்கியமான நாடாகத் திகழ்வதாகவும் ஆனாலும் ஒரு சிலர் மலேசிய இன்னும் வெளிப்படையாக எதிர்க்க வேண்டும் என ஆசைப்படுகிறார்கள் என்றும் பாலஸ்தீன விவகாரம் அரசியல் நோக்கத்திற்கானது இல்லை என்றும் உணர்வுப்பூர்வமானது என்றும் Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார். இஸ்ரேலின் கொடூரமானத் தாக்குதலுக்கு எதிராக மலேசியா முழுமையாகச் செயல்பட பி.கே.ஆர் முதுகெலும்பாக இருக்க வேண்டும் என Datuk Seri Anwar Ibrahim வலியுறுத்தினார்.
Perdana Menteri Anwar Ibrahim menggesa semua anggota PKR yang menang pemilihan parti agar berikrar menyokong perjuangan Palestin. Beliau menegaskan isu Palestin bukan politik tetapi kemanusiaan, dan Malaysia perlu tegas menentang kekejaman Israel.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *