பி.கே.ஆர் கூட்டத்தில் நாற்காலிகளை வீசி கலவரம்! – காவல்துறை விசாரணை!
- THINAGAREN SANGGAREN
- 17 May, 2026
மே 17,
பி.கே.ஆர் கூட்டத்தில் இரு கும்பலுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கலவரமாக மாறியது. இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை கோலா சிலாங்கூர் பி.கே.ஆர் கூட்டத்தில் நிகழ்ந்திருப்பதாகவும் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்றும் பி.கே.ஆர் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் Datuk Dr Fuziah Salleh தெரிவித்துள்ளார்.
கோலா சிலாங்கூரில் மாவட்டப் பொறுப்பாளர்களை நியமிப்பதிலும் கிராமத் தலைவர்களை நியமிப்பதிலும் முறையான வரையறைகளைப் பின்பற்றவில்லை என்பதால் கோலா சிலாங்கூர் பி.கே.ஆர் தலைவர் சிவபாலனுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கோலா சிலாங்கூர் பி.கே.ஆர் உறுப்பினர்கள் முன்மொழிந்துள்ளனர்.
அந்த தீர்மானம் நிறைவேற்றப்படாமலும் தீர்மானத்தை ஏற்க முடியாது என்றும் பி.கே.ஆரின் தேசிய பொறுப்பாளர் மட்டுமே தீர்மானத்தை அங்கீகரிக்க முடியும் என்பதால் கோலா சிலாங்கூர் பி.கே.ஆர் தலைவருக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக்கொள்ளாத பி.கே.ஆர் உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது இரு கும்பலுக்கும் இடையில் கலவரம் ஏற்பட்டுள்ளது.
சுமார் 20 நிமிடங்களுக்கும் மேலாக இரு குழுவினருக்கும் இடையில் ஏற்பட்ட கலவரம் குறித்து சுங்கை பூலோ மாவட்டக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாகவும் காவல்துறையின் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கோலா சிலாங்கூர் மாவட்டப் பி.கே.ஆர் தலைவர் சிவபாலன் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



