சிறிய பிரச்சனையை ஊதி பெரிதாக்காதீர்! மாநிலத் தேர்தலை நோக்கி பி.கே.ஆர்! – பி.கே.ஆர் MPN தலைவர் Shamsul Iskandar
- Thinagaren Sanggaren
- 22 Sep, 2025
செப்டம்பர் 22,
மலாக்கா மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் பிகேஆரின் வெற்றியை உறுதிச் செய்வதில் மட்டுமே கவனம் செலுத்தும்படி பி.கே.ஆர் கட்சியின் மலாக்கா மாநிலத் தலைவர் Datuk Seri Shamsul Iskandar Mohd Akin உறுப்பினர்களுக்கு வலியுறுத்தினார். அடுத்த ஆண்டு மலாக்கா மாநிலச் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியங்கள் உள்ளதால் சின்ன பிரச்சனையாக இருந்தாலும் அதனை ஊதி பெரிதாக்கி மலிவான விமர்சனத்தைத் தேடிக்கொள்ள வேண்டாம் என Datuk Seri Shamsul Iskandar Mohd Akin உறுப்பினர்களுக்கு நினைவூட்டினார்.
நாம் ஒற்றுமை கூட்டணியின் ஆட்சியின் அங்கம்
வகித்து வருகிறோம். அப்படியானால் நாம் பிரச்சனைக்கான தீர்வை வழங்கும் இடத்தில் இருக்கிறோம்
என்பதைப் பி.கே.ஆர் உறுப்பினர்கள் உணர வேண்டும் என Datuk Seri Shamsul
Iskandar Mohd Akin தெரிவித்தார். மலாக்காவில் பி.கே.ஆரின்
ஆளுமையை நாம் நிரூபிக்க முக்கிய திட்டங்களைச் செயல்படுத்தவிருப்பதாகவும் பி.கே.ஆர்
உறுப்பினர்கள் பிளவுப்படாமல் மக்கள் பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரதமரின் அரசியல்
செயலாளருமான Datuk Seri Shamsul Iskandar Mohd Akin தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



