அன்வார் மீது நம்பிக்கை இல்லை! பி.கே.ஆரிலிருந்து விலகி RAFIZI பக்கம் சாயும் உறுப்பினர்கள்!
- THINAGAREN SANGGAREN
- 13 Jun, 2026
ஜூன் 13,
பி.கே.ஆர் கட்சியின் தலைவரும் பிரதமருமான டத்தோ ஸ்ரீ அன்வாரின் மீது நம்பிக்கை இல்லாததால் பேராக் மாநில PARIT BUNTAR பி.கே.ஆர் கட்சியின் 50 செயலவை உறுப்பினர்களும் பி.கே.ஆர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். PARIT BUNTAR பி.கே.ஆர் கட்சியின் இளைஞர் பிரிவு, மகளிர் பிரிவு, மாணவர் அணி ஆகியவற்றைக் கலைப்பதாக PARIT BUNTAR இளைஞர் பிரிவுத் தலைவர் Akhbar Ridzuan Jamaludin தெரிவித்துள்ளார். அன்வாரின் ஒரு சில செயல்பாடுகளால் பி.கே.ஆரின் முக்கியத் தலைவர்கள் வெளியேறியுள்ளனர். நாளை எங்களுக்கும் இதே நிலை ஏற்படலாம். குடும்பத்தை விடவும் கட்சி தொண்டர்களைத் தலைமை பாதுகாக்க வேண்டும். ஆனால் பி.கே.ஆர் கட்சியை வளர்த்த பாடுபட்ட தலைவர்களே பி.கே.ஆரிலிருந்து விலகும் நிலை ஏற்பட்டுள்ளது.
PARIT BUNTAR பி.கே.ஆர் கட்சியின் இளைஞர் பிரிவு, மகளிர் பிரிவு, மாணவர் அணியைச் சேர்ந்த 50 செயலவை உறுப்பினர்களும் பி.கே.ஆர் கட்சியிலிருந்து விலகி RAFIZI RAMLI தலைமையிலான BERSAMA கட்சியில் இணைவதாகவும் இளைஞர்களுக்கான அரசியல் எதிர்காலத்தைப் பி.கே.ஆரில் காண முடியவில்லை என்றும் PARIT BUNTAR பி.கே.ஆர் கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் Akhbar Ridzuan Jamaludin தெரிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



